இருமுனை நெருக்கடியில் அரசாங்கம் -செ.சிறிதரன்
இனப்பிரச்சினை காரணமாக இலங்கையில் அரசியல்
நிலைமைகள் ஸ்திரமற்றதாகவே இருக்கின்றன. இந்த நிலைமை நீண்டகாலமாகவே தொடர்ந்து வருகின்றது. கால் நூற்றாண்டுக்கு மேலாக நாட்டில் அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருந்திருக்கின்றது. அவசரகாலச் சட்டத்தின் துணையில்லாமல் நாட்டின் நிர்வாகத்தைக்கொண்டு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தமையே இதற்குக் காரணமாகும்.
நாட்டின் பாதுகாப்பு, நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் என்பன ஸ்திரமாக இருந்திருந்தால், அந்த கால் நூற்றாண்டு காலப் பகுதியில் மாறி மாறி ஆட்சி பீடமேறிய அரசுகள் இவ்வாறு அவசர காலச் சட்டத்தின் துணையை நாட வேண்டிய தேவை எழுந்திருக்க மாட்டாது. முக்கியமாக யுத்த மோதல்கள் ஏற்பட்டிருந்த சூழலும் அவசரகாலச் சட்டத்தின் துணையோடு நாட்டை நிர்வகிக்க வேண்டிய கட்டாய நிலைமையை ஏற்படுத்தியிருந்தது. நாட்டில் யுத்தம் ஒன்று மூள்வதற்கு இனப்பிரச்சினையே மூலகாரணமாகும்.
நாடு அந்நியராகிய ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து, மூவின மக்களும் சமமான உரிமைகளுடன் வாழ்வதற் குரிய சரியான ஆட்சி முறைமையொன்று நாட் டில் ஏற்படுத்தப்படாமையே இனப்பிரச்சினை ஏற்படுவதற்குக் காரணமாயிற்று. இனப்பிரச்சினைக்கு ஆரம்பத்திலேயே ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கு ஆட்சியாளர்கள் தவறிவிட்டார்கள்.
அது மட்டுமல்லாமல் அது புரையோடி, பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கி, நாட்டையே சீரழிக்கத் தொடங்கிய நிலைமையிலும்கூட, இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான ஓர் அரசியல் தீர்வைக் காண்பதற்கு ஆட்சியாளர்கள் முன்வரவில்லை. சிறுபான்மையினரின் உரிமைகள் மதிக்க ப்பட வேண்டும்.
அவர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் எனக்கோரி நடத்தப்பட்ட சாத்வீகப் போராட்டங்கள் ஆயுத பலத்தைக் கொண்டு பொலிஸாரையும், இராணுவத்தினரையும் பயன்படுத்தி அடக்கியொடுக்குவதற்கு அரசுகள் முனைந்திருந்தன. இதனால் அடக்கு முறைக்கு எதிராக ஆயுதப் போராட்டம் தலையெடுத்தது, நாட்டில் மோசமான யுத்தம் மூண்டது. அந்த இனப்பிரச்சினை புரையோடியிருந்தது.
ஆயினும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அரசாங்கம் வெற்றிபெற்றது. விடுதலைப்புலிகள் தோல்வியடைந்தார்கள். அவர்களின் தலைமைகளும் அழிக்கப்பட்டுவிட்டன. ஆனால் இனப்பிரச்சினையில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படவில்லை. இப்போது யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் உருண்டோடிவிட்டன.
இந்த நிலைமையிலும் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்குரிய முன் முயற்சிகளை மேற்கொள்வதற்கு ஆட்சியாளர்கள் விருப்பமற்றவர்களாகவே இருக்கின்றார்கள். யுத்தம் முடிவடைந்ததையடுத்து, நாட்டில் வெடிச்சத்தங்கள் இல்லை. இரத்த ஆறு ஓடுவதில்லை. பொருளாதாரக் கட்டுப்பாடுகள், போக்குவரத்துத் தடைகள் என்பன இப்போது நீக்கப்பட்டுவிட்டன. இதனால் நாட்டில் அமைதி ஏற்பட்டிருக்கின்றது.
மக்கள் விரும்பிய இடங்களுக்கு எந்த வேளையிலும் எங் கும் சென்று வரலாம். அந்த வகையில் நாட்டில் அமைதி ஏற்பட்டுள்ளது. ஆனாலும், இப்போது அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில், பிரச்சினைகள் இரண்டு வடிவங்களைப் பெற்றிருக்கின்றன. அரசியல் தீர்வு காணப்பட வேண்டிய இனப்பிரச்சினை என்பது ஒன்று. இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான சட்ட மீறல்கள் என்பவற்றிற்குப் பொறுப்பு கூற வேண்டும் என்பது இரண்டாவது பிரச்சினையாகும்.
இந்தப் பிரச்சினைகள் காரணமாக பல்வேறு நெருக்கடிகள் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கின்றன. உள்ளூர் அழுத்தங்களாகவும், சர்வதேச அழுத்தங்களாகவும் அந்த நெருக்கடிகள் விசுவரூபமெடுத்து, அரசாங்கத்தை ஆட்டிப்படைக்க முனைந்திருக்கின்றன. இருந்த போதிலும், இந்த நெருக்கடிகளை நாட்டு மக்களின் எதிர்கால நன்மைகளைக் கருத்திற்கொண்டு அதற்கேற்ற வகையில் கையாள்வதற்கு இன்னுமே அரசாங்கம் தயாராகவில்லை.
அதற்கு முன்வரவுமில்லை. இதனால் சர்வதேச தலையீடுகள் அதிகரித்திருக்கின்றன. ஆனால் வெளியார் தலையீடு எதனையும் அனுமதிக்கப் போவதில்லை என்று அரசாங்கம் உறுதியாகவும், பிடிவாதமாகவும் கூறி வருகின்றது. இதில் விட்டுக்கொடுக்காத ஒரு போக்கையே அரசு கடைப்பிடித்து வருகின்றது.
அரசியல் தீர்வு யுத்தம் முடிவடைந்ததையடுத்து, இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்படும் என்று எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்திருந்தார்கள். சர்வதேசமும்கூட இதில் ஆர்வமாக இருந்தது. ஆனால், அரசாங்கம் தானாக முன்வந்து தமிழர் தரப்புடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கவே இல்லை.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து யுத்தமோதல்கள் இடம்பெற்ற பகுதிகளில் தேர்தலை நடத்தியதும், மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற தலைவர்களுடன் பேச்சுக்கள் நடத்தி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று யுத்தம் நடைபெற்ற காலத்தில் கூறியிருந்த ஜனாதிபதி யுத்தத்திற்குப் பின்னர் தேர்தல்கள் நடைபெற்ற போதிலும், தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று பல தடவைகள் தமிழ்த்தேசிய கூட்ட மைப்பு வேண்டுகோள் விடுத்தபோதிலும், அரசு பராமுகமாகவே இருந்தது. பின்னர் இந்தியாவின் அழுத்தத்தையடுத்தே பேச்சுவார்த்தைகளை அரசு ஆரம்பித்தது, அந்தப் பேச்சுவார்த்தைகள் ஒரு வருட காலம் நீடித்ததன் பின்னர், அந்தப் பேச்சுக்கள் அரசாங்கக் கட்சியுடன் நடைபெற்ற பேச்சுக்களே தவிர, அரசாங்கத்துடன் நடத்தப்படவில்லை என்று அப்பட்டமாகக் கூறி, அந்தப் பேச்சுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மறுத்துவிட்டது.
அத்துடன் அரசியல் தீர்வுக்கான பேச்சுக்களை பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலேயே நடத்த வேண்டும் எனவே, கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வரவேண்டும் என்று அரசாங்கத் தரப்பினர் வலியுறுத்தி வந்தார்கள். ஆனால், நேரடி பேச்சுக்களில் ஓர் உடன்பாட்டை எட்டியபின்னர், அது குறித்து தெரிவுக்குழுவில் பேசலாமே தவிர, மற்றும்படி, தெரிவுக்குழுவுக்கு வருவதற்குத் தயாரில்லை என்று கூட்டமைப்பு உறுதியாகக் கூறிவிட்டது.
அப்படி இருந்த போதிலும், இனிமேல் நேரடிப் பேச்சுவார்த்தைகள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அடித்துக் கூறியுள்ள அரசு, பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமானால், தெரிவுக்குழுவுக்கு வந்தே ஆகவேண்டும். பேச்சுவார்த்தைகள் என்றால் அது தெரிவுக்குழுவில் மட்டும்தான் நடைபெறும். வேறு எங்கும் நடைபெற மாட்டாது என்று அழுங்குப் பிடியாக இருக்கின்றது.
இத்தகையதோர் இழுபறி நிலையில்தான், இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு புதுடில்லிக்குச் சென்று சந்தித்துப் பேச்சுக்களை நடத்திவிட்டுத் திரும்பியிருக்கின்றது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் கடந்த 1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13 ஆவது அரசியல் திருத்தத்திற்கு அமைவாக அதற்கு அப்பால் சென்று அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் விதத்தில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்திய அரசு கூறியிருக்கின்றது.
இதுவிடயத்தில் இலங்கை அரசாங்கத்துடன் பேசியிருப்பதாகவும், தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் யுத்தம் நடைபெற்ற காலத்தில் இந்தியாவின் கைகளை மீறி, இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் நோர்வே அனுசரணையாளராகச் செயற்பட்டிருந்தது. ஆயினும் அந்த முயற்சிகளில் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் ஒரு அரசியல் சமரசத்தை ஏற்படுத்தி ஓர் அரசியல் தீர்வை நோக்கி இருதரப்பினரையும் முன் நகர்த்திச் செல்வதற்கு நோர்வேயினால் முடியாமல் போய்விட்டது.
அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததுடன், இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திய அரசு விடுதலைப்புலிகளையும் தோற்கடித்து வெற்றிவாகை சூடியது. இப்போது யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் புதிய இந்தியப் பிரதமர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுத்து, அரசாங்கத்தையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பையும் பேச்சுவார்த்தை மேசைக்கு நகர்த்திச் செல்வாரா என்று அரசியல் வட்டாரங்களில் வினா எழுப்பப்பட்டிருக்கின்றது.
இந்திய விஜயம் ஏற்படுத்தியுள்ள பரபரப்பு இந்திய அரசாங்கத்துடன் பேச்சுக்கள் நடத்துவதற்காகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு புதுடில்லிக்கு மேற்கொண்டிருந்த விஜயம் அரசாங்க வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்காகவே கூட்டமைப்பினர் அங்கு செல்கின்றார்கள் என்றவாறெல்லாம், அரச ஆதரவு தரப்பினர் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்கள்.
அது மட்டுமல்லாமல், இந்தியாவினால் இலங்கை அரசுக்கு எந்தவிதமான அழுத்தங்களையும் பிரயோகிக்க முடியாது. அவ்வாறு வருவது என்பது இறைமையுள்ள இலங்கை அரசின் உள்விவகாரங்களில் இந்தியா மேற்கொள்கின்ற அத்துமீறிய தலையீடாகவே இருக்கும். அதனை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்திய விஜயமானது, ஒரு வெற்றிகரமான விஜயம் என்றே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளின் போது என்ன நடந்தது, அரசாங்கத்தின் அணுகுமுறை எப்படி இருந்தது, இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பில் தற்போது நாட்டில் உள்ள உண்மையான நிலைமை என்ன, யுத்தத்தின் பின்னர், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்ற நிலைமைகள் எப்படி இருக்கின்றன, மீள்குடி யேற்றப் பகுதிகளில் இடம்பெற்று வருகின்ற அரசாங்கத்தின் அத்துமீறல் நடவடிக்கைகள் என்ன,
அங்கு நிரந்தரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினர் பொதுமக்களின் காணிகளை அபகரிப்பது உட்பட என்னென்ன செய்கின்றார்கள் என்பது போன்ற பல்வேறு விடயங்களை இந்திய அரசுக்கு, தாங்கள் மிகவும் தெளிவாக எடுத்துக் கூறியிருப்பதாகவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவற்றை உன்னிப்பாகவும், ஆர்வமாகவும் கேட்டு அறிந்து கொண்டதாகவும் கூட்டமைப்பினர் கூறியுள்ளனர்.
அத்துடன் இலங்கையில் தமிழ் மக்களுடைய நிலைமைகளை நேரில் கண்டறிவதற்காக ஒரு தூதுக்குழுவை அனுப்பி வைக்க வேண்டும், விசேட தூதுவர் ஒருவரையும் நியமிக்க வேண்டும் என்றும் கூட்டமைப்பினர் இந்தியப் பிரதமரிடம் கோரியிருந்தார்கள். இந்தச் சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி கைகட்டிய வண்ணம் அமர்ந்திருந்ததை, இலங்கை விவகாரத்தில் அவர் கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்துகின்ற குறியீடாகக்கூட ஊடகங்கள் வர்ணித்திருந்தன.
கூட்டமைப்பினர் கூறியவற்றைச் செவிமடுத்த இந்தியப் பிரதமர் விசேட தூதுவர் ஒருவர் நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை யென்றும், இலங்கைக்கான தூதுவருக்கு ஏற்கனவே அத்தகைய அதிகாரம் இருப்பதாகவும் கூறியிருந்தார். அதேநேரம், இந்திய அரசின் தூதுக்குழுவொன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவதையும் அவர் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளவில்லை. அத்தகைய தூதுக்குழு மறுதலையான நிலைமைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை காட்டியிருந்தார்.
இருந்த போதிலும், இந்தியா இலங்கையின் இனப்பிரச்சினையில் ஏதாவது ஒரு நடவடிக்i கைய அர்த்தமுள்ள வகையில் மேற்கொள்ள வேண்டிய ஒரு கட்டாய சூழலிலேயே இருக்கின் றது. ஏனெனில் இந்தியாவின் பரிந்துரையில் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கமைவாக, இலங்கையின் அரசியலமைப்பில் இருக்கின்ற, வடமாகாண சபைக்கான அதிகாரங்களை ஒருபோதும் வழங்க முடியாது என்று இலங்கை அரசாங்கம் கூறி வருகின்றது.
அது மட்டுமல்லாமல், வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் குறிப்பிட்டிருப்பது போன்று, இருக்கின்ற அதிகாரங்களையும் மத்திய அரசாங்கத்திடமே கொண்டு சென்று குவிப்பதற்கான நடவடிக்கைகளையே அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. அதிகாரங்களை மாகாண சபைக்கு இல்லாமல் செய்வது மட்டுமல்லாமல், மாகாண சபைக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதியைக்கூட அரசாங்கம் திவிநெகும போன்ற விசேட வேலைத்திட்ட சட்டத்தின் ஊடாக சுரண்டி வருகின்றது.
இத்தகைய ஒரு சூழ்நிலையில் இந்திய பிரதமர், இனப்பிரச்சினை விவகாரத்தில், இல ங்கை அரசாங்கத்தை எந்த வகையில் கையாளப் போகின்றது என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. பொறுப்பு கூறுதல் இலங்கை விவகாரத்தில் குறிப்பாக அரசி யல் தீர்வு விடயத்தில் இந்தியா மேற்கொள்ள வேண்டிய கடப்பாடுகள் ஒரு பக்கம் இருக்க, இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பு கூறவேண்டும் என்ற அழுத்தத்தின் ஊடாக, இலங்கை மீது சர்வதேசத்தின் அழுத்தம் குவிந்திருக்கின்றது.
மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசு பொறுப்பு கூற வேண்டும் என்ற சர்வதேச்ததின் வலியுறுத்தலின் மூலம், இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிட்டுமா என்பதை அறுதியிட்டு கூற முடியாதிருக்கின்றது. மனித உரிமைகளையும், சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களையும் மீறிச் செயற்பட்டமைக்காக அரசு பொறுப்பு கூறுவதென்பது சம்பந்தப்பட்டவர்களைக் கண்டு பிடித்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்.
அதேநேரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்பதே பொதுவான எதிர் பார்ப்பாக இருக்கின்றது. மனித உரிமைகளையும், சர்வதேச மனி தாபிமான சட்டங்களையும் மீறிச் செயற்பட்ட வர்களைக் கண்டுபிடித்து அவர்களை சட்ட த்தின் முன் நிறுத்துவதன் ஊடாக இனப் பிரச்சினைக்கு அதிகாரப் பரவலாக்கலுடன் கூடிய அரசியல் தீர்வு ஏற்படும் என்று கூற முடியாது. ஆயினும் இலங்கை அரசு பொறுப்பு கூற வேண்டும் என்பதில் சர்வதேசம் குறிப்பாக அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரம் காட்டி வருவதையே காணக்கூடியதாக இருக்கின்றது.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையும்கூட, இதுவிடயத்தில் மிகத் தீவிரமாகச் செயற்பட்டு வருவதாகவே தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த நிலையில் அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியா அடுத்ததாக என்ன செய்யப் போகின்றது என்பதும், அமெரிக்காவின் பின்புல பலத்தில் கொண்டு வரப்பட்ட பிரேரணைகளின் அடிப்படையில் ஐ.நா. மனித உரிமைப் பேரவை முன்னெடுத்துள்ள சர்வதேச விசாரணைகளும் இலங்கையை இரு முனைகளில் நெருக்கிக் கொண்டிருப்பதையே இப்போது காணக் கூடியதாக இருக்கின்றது.
இத்தகைய இரு முனை நெருக்குதல்களின் மூலம் - யுத்தம் முடிவடைந்ததன் பின்னரும், நாளுக்கு நாள் மோசமடைந்து செல்கின்ற அடக்குமுறை சூழலில் யுத்தம் மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களுக்கு விமோசனம் கிடைக்குமா என்று தெரியவில்லை.