Breaking News

மகிந்தவின் கொடும்பாவி எரித்து ஆர்ப்பாட்டம் - திரண்டது அ.தி.மு.க

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
இலங்கை ராணுவ இணையதளத்தில் தமிழக
முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தி கட்டுரை வெளியிடப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க.வினர் மற்றும் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்ய முற்பட்டனர்.

தூதரகத்தின் அருகே செல்ல பொலிஸார் அனுமதி மறுத்ததால், லயோலா கல்லூரி வாசலில் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் உருவம்பொம்மையை எரித்தனர். இரண்டு மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.