வடக்கு மாகாண சபையில் தொடரும் பனிப்போர் -திருமலை நவம்
செயலாளரும் புரிந்துணர்வுடன் ஒத்துழை த்து செயற்பட வேண்டும். வடமாகாண சபை யின் நல்லாட்சிக்கு அதன் பிரதம செயலாளர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முதல் அமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் ஜூலை மாதம் 28 ஆம் திகதியன்று ஆலோசனை வழங்கிய உச்ச நீதிமன்றம் மாகாண சபையின் பிரதம செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் பொதுச்சேவைகள் ஆணைக்குழுவுக்கே உண்டு.
மாகாண முதலமைச்சர் ஒருவர் இந்த உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது என கடந்த 4 ஆம் திகதி உத்தரவு வழங்கியுள்ளது. இந்த உத்தரவின் மூலம் மாகாண சபையொன்றின் அதிகாரம் ஆதிபத்திய வலு, அது பாயக்கூடிய எல்லைகள் நிர்ணயத்துக் காட்டப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இலங்கையின் இனப் பிரச்சினைக்கான ஒரு பெறுமதிமிக்க முன் தீர்வாக இலங்கை இந்திய உடன்படிக்கையின் மூலம் கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறை இன்று பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கு பிடித்த கதையாக ஆகிக் கொண்டிருக்கிறது என்பதும், உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காய உள்ளீடாகவும் பார்க்கப்படுகிறது என்பதும் புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயம்.
வட மாகாண சபை உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து ஆளுநர் சார்ந்த அதிகாரம் பிரதம செயலாளரின் கடமைக் கூறுகளும் அவரின் பணிப்பதிகாரி முதலமைச்சரா? ஆளுநரா? என்ற வாதப் பிரதிவாதங்கள் வளர்ந்து கொண்டு வந்த நிலையில்தான் வடமாகாண முதல் அமைச்சருக்கும் பிரதம செயலாளருக்கும் இடையிலான பனிப்போர் உருவாகியது.
முதலமைச்சர் பிரதம செயலாளர் விடுமுறை எடுத்தல் மாகாணத்துக்கு வெளியே செல்லுதல், வெளிநாடுகளுக்கு செல்லுதல் போன்ற காலப்பகுதிகளில் முதல் அமைச்சருக்கு முன்னறிவித்தல் வழங்கப்பட வேண்டும். முதல் அமைச்சரினதும் அமைச்சர்களினதும் சட்டபூர்வமான கட்டளைகளு க்கு கீழ்ப்பணிந்து மாகாண நிர்வாகத்தை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் நடந்துகொள்ள வேண்டுமென
சட்டக்கோவையொன்று முதலமைச்சரால் வெளியிடப்பட்ட நிலையில், இச்சட்டக் கோவை (சுற்றுநிருபம்) மூலம் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக பிரதம செயலாளர் விஜ யலக் ஷ்மி ரமேஸ், வட மாகாண முதல் அமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனு மீதான விசாரணை கடந்த ஜூலை மாதம் 14 ஆம், 28 ஆம் திகதிகளில் உயர் நீதிமன்றில் இடம்பெற்றபோது பிரதிவா தியான வடமாகாண முதல் அமைச்சர் விக்கினேஸ்வரன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கள் பதில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.
அதில் வடமாகாண சபையின் பிரதம செயலாளர் விடுமுறை எடுத்தல் மாகாணத்துக்கு வெளியே செல்லுதல் உட்பட்ட விடயங்களில் முதலமைச்சருக்கு முன்ன றிவித்தல் வழங்கப்பட வேண்டுமென மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இதனை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் வடக்கு மாகாண சபையின் நல்லாட்சிக்கு பிரதம செயலாளர் ஒத்துழைக்க வேண்டுமென ஆலோசனை நல்கியதுடன், அடிப்படை மனித உரிமை மீறல் தொடர்பான மனு மீதான தீர்ப்பை கடந்த 4 ஆம் திகதி வரை ஒத்திவைத்து கடந்த 4 ஆம் திகதி உயர்நீதிமன்று உத்தரவு வழங்கியபோது பிரதம செயலாளருக்கு உத்தரவிடும் அதிகாரம் முதல் அமைச்சருக்கு இல்லையென்ற உத்தரவை உயர் நீதிமன்றம் வழங்கியிருந்தது.
இந்த உத்தரவின் மூலம் மீண்டும் தெளிவு படுத்தப்பட்ட விடயங்கள் யாதெனில் வடமாகாண முதல் அமைச்சரும் பிரதம செயலாளரும் புரிந்துணர்வுடன் சமாதானமாக நடந்துகொள்ள வேண்டும். ஏனைய மாகாணங்களை போன்று பிரதம செயலாளரை நியமனம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளதோடு, அரச அதிகாரி ஒருவரை நியமிப்பது அல்லது இடம்மாற்றுவது அரச சேவை ஆணைக்குழுவின் ஊடாகவே நடைபெற வேண்டும்.
அந்த அதிகாரம் ஆணைக்குழுவுக்கேயுள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. மாகாணசபை முறையொன்று உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து அதன் அதிகாரவலு, அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பிரயோகம் சம்பந்தமாக திருப்திகரமான முடிவு எதுவும் காணப்படாத நிலையிலேயே தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் மாகாண சபை முறை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிள்ளையாக பிறப்பெடுத்த 13 ஆவது திருத்தம் அதன் அதிகாரங்கள் தொடர்பில் விடுதலைப்புலிகள் அமைப்பினர் தமது கடுமையான ஆட்சேபனையை அன்றைய கால கட்டத்தில் தெரிவித்திருந்தார்கள்.
இந்திய இலங்கை ஒப்பந்தம் உருவாகுவதற்கு சில வாரங்களுக்கு முன் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி விடுதலைப் புலி அமைப்பினரை தமது இல்லத்துக்கு அழைத்து ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி நிர்ப்பந்தித்த போது அவர்கள் மாகாண சபை வடிவமைப்பிலுள்ள வரையறைகளையும் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டியதுடன் வடக்கு கிழக்கு மாகாணங்கள் என்பது ஒன்றாக இணைந்தவை.
தமிழ்மக்களின் தாயகம் இந்த ஐக்கிய ஒன்றிணைவை ஒப்பந்தத்தில் கூறுவதுபோல் கருத்து வாக்கெடுப்புக்கு விடுவது அபாயமானது என்றும், 13 ஆவது சரத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் அதிகாரப் பகிர்வானது தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு போதுமானதல்லவென்றும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
ஆனால் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியோ தமிழ்மக்களின் அபிலாஷையை நோக்கி நகரும் பெறுமதிமிக்க தீர்வின் முன்மாதிரியாகக் கொண்டு அதை நோக்கி விரிவுபடுத்துவதற்கு இந்தியா எப்பொழுதும் துணை நிற்கும் என்று கூறியிருந்தார்.
சில நெருக்கடிகள் நிர்ப்பந்தங்கள் காரணமாக விடுதலைப் புலிகள் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டபோதும் பின்னாளில் அவை முறிவடைந்து அவர்கள் விலகிக் கொண்டதும் இவர்களின் எதிரணியைச் சார்ந்த ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈ.என்.டி.எல்.எப்., ரெலோ போன்ற அமைப்புக்கள் இந்திய அனுசரணையிலிருந்து விடுபட்டுப்போக முடியாத சூழ்நிலையில் மாகாண சபையை ஏற்றுக்கொண்டமையும் வரலாற்று ரீதியான உண்மைகள்.
இவ்வாறு உருவாக்கப்பட்ட மாகாண சபையொன்றின் அமைப்பு முறையினையோ அதிகார வலுவையோ வளர்த்தெடுக்கும் எந்த கைங்கரியத்தையும் இலங்கையரசாங்கம் மேற்கொள்ளவில்லையென்பதே கசப்பான உண்மையாகும்.
மாறாக, மாகாண சபையின் அதிகாரங்களைப் பறித்தெடுத்து விட்டு அதையொரு வெற்றுக் காகித இராச்சியமாக்க அரசாங்கம் எடுத்துக்கொண்ட முயற்சிகளே அதிகமாகும். இதன் முதல் அத்தியாயமாகவே 2006 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி வடகிழக்குப் பிரிக்கப்பட்டு அதன் இன ரீதியானதும் பூகோள ரீதியான பலம் குறைக்கப்பட்டது.
1987ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதிய இலங்கை இந்திய உடன்படிக்கைக்கு அமைய தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணம் 16 வருடங்கள் இயங்கி வந்த நிலையில் இம்மாகாணங்களின் இணைப்பினை இரத்து செய்ய வேண்டுமெனக்கோரி ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினரான ஜயந்த விஜயசேகர எல்.கே.வசந்த மற்றும் ஏ.எல்.முஹமட் புஹாரி ஆகியோரினால் உச்ச நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது.
மேற்படி வழக்கை விசாரணை செய்த முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, நீதியரசர்களான நிஹால் ஜயசிங்க, என்.கே.உதலகம, ராஜபெர்னாண்டோ அமரதுங்க ஆகியோரை உள்ளடக்கிய உச்ச நீதிமன்றில் வடகிழக்கு மாகாணத்தின் இணைப்பு செல்லுபடியாகாதென தீர்ப்பு (16.10.2006) அன்று வழங்கப்பட்டது.
இவ்வாறானதொரு தீர்ப்பு வழங்கப்பட்ட காலத்திலிருந்தே மாகாண சபை முறையின் உள்ளடக்கமும் அதிகார வலுவும் சிதைவடையத் தொடங்கி விட்டன என்பது மறைமுகமான உண்மை.
இதன் மறுபதிப்பாகவே திவுநெகும சட்ட மூலத்தை நிறைவேற்றியமை மற்றும் வட மாகாண தேர்தலுக்குமுன் 13 ஆவது திருத்தத்திலுள்ள அதிகாரங்களை குறைத்து விட வேண்டுமென்ற பிரயத்தனங்கள், மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களையோ, காணி அதிகாரங்களையோ வழங்க நாம் தயாராகவில்லையென அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்த எத்தனம் என்பவற்றின் இன்னுமொரு வடிவமாக இன்று பிரதம செயலாளர் விவகாரம் அமைந்துள்ளது.
மேலே எடுத்துக்காட்டப்பட்ட எல்லாவகை எத்தனங்களும் மாகாண சபை முறையின் இருப்புமுறையை இல்லாது ஒழிப்பதற்கோ அல்லது பலவீனப்படுத்துவதற்காக எடுத்த முயற்சிகளாகவே கருதப்பட வேண்டும்.
2012 ஆம் ஆண்டு திவிநெகும சட்டமூலத்தால் ஏற்பட்ட பிரச்சினை மாகாண சபையின் அதிகார வன்மையை குறைக்கும் ஒரு முயற்சியாகவே கருதப்பட்ட காரணத்தினால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுகூடி அச்சட்டமூலத்தை எதிர்க்க முற்பட்டன.
திவிநெகும சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட ஏக காலத்தில் வடக்கு மாகாண சபை உட்பட்ட அனைத்து மாகாண சபையின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில் வடக்கு மாகாண ஆளுநரின் விதப்புரையுடன் சட்டமூலத்தை அங்கீகரிக்க முடியுமென்ற நிலைப்பாட்டை அரசு சுட்டிக்காட்டியிருந்தமையும் இதை ஆட்சேபித்துக் கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் 2.10.2012 மேல்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல்செய்த ரிட்மனுவில்,
திவிநெகும சட்ட மூலம் தொடர்பில் வடக்கு மாகாண சபையின் கருத்து எது என்பதை வட மாகாண ஆளுநர் பிரதிபலிக்க முடியாது. எனவே ஆளுநர் கருத்து வெளியிடுவதை தடை செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட்மனுவும் அதன் பின்னே திவிநெகும சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட விதமும் மாகாண சபையொன்றின் அதிகாரப்போக்கு இதன்மூலம் குறைத்து விடப்பட்ட நிலையும் வடகிழக்கு மக்கள் தெளிவாக அறிந்து கொண்ட விவகாரங்களாகும்.
இதற்குப் பின் இன்னுமொருபடி முன்னேறி வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு முன்னமே, மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை பிய்த்து எடுத்துவிட வேண்டுமென்ற தீவிரத்துடன் தென்னிலங்கை இனவாதச் சக்திகள் பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டமையும் மாகாண சபை முறையொன்றின் அதிகார வலுவை இல்லாது ஒழிக்கும் ஒரு செயல்முறை சார்ந்த நடவடிக்கை பாராளுமன்றத்தின் மூலம் கொண்டுவர வேண்டுமென ஒரு குழு சார்ந்தவர்கள் எடுத்த முயற்சிகளும் தெரியப்பட்ட விடயமே.
வட மாகாண சபை தேர்தல் நடத்தப்படுமானால் அது இரண்டாவது ஈழத்துக்கான போர். இதற்கு இடமளிக்கக்கூடாது. மாகாண சபை முறையை முற்றாக ஒழிக்க வேண்டும் என தென்னிலங்கை தீவிரவாத சக்திகள் குரல் கொடுத்தமை புலிகளைப் பலவீனப்படுத்த கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டமூலமானது புலிகள் ஒழிக்கப்பட்ட இப்போது தேவையில்லை.
இந்தியாவினால் பலவந்தமாக திணிக்கப்பட்ட அரசியல் திருத்தச் சட்டம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்'' என ஆளும் அரசாங்கத்தின் பங்காளியும் அமைச்சருமான விமல்வீ ரவன்ச உட்பட்ட, இனவாதக் குழுக்கள் 13 ஆவது திருத்தத்தை இல்லாது ஒழிக்க எடுத்த முயற்சிகள் எல்லாம் வடக்குகிழக்கு மக்களுக்கு உள்ள சின்னளவான அதிகாரப் பகிர்வின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி நிலைப்பாடு களைக் காட்டுவனவாகவே இருந்து வந்துள்ளன.
இனப்போர் மும்முரம் அடைந்து போயிருந்த கால கட்டத்தில் (2009) இலங்கைய ரசாங்கமானது, 13 ஆவது திருத்தத்துக்கு மேலாக தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்கவிருக்கிறோமென சர்வதேசத்துக்கும் இந்தியாவுக்கும் வாக்குறுதியளித்திருந்தார்கள்.
ஆனால் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின் வாக்குறுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்துபோய் ஒன்றுமேயில்லையென்ற பூஜ்ஜிய நிலைக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் இருக்கும் மாகாண சபை முறையின் ஒவ்வொரு அலகுகளையும் இடுப்பொடிந்து போடும் நிலைமைகளே உருவாகியுள்ளன என்பதை கடந்த கால அனுபவங்கள் காட்டுகின்றன.
வடமாகாண சபை உருவாக்கத்துக்குப்பின் மூன்று விடயங்கள் மாகாண சபையின் செயற்பாடு ரீதியான போக்குக்கு தடை விதிக்கும் பிரகடனங்களாக ஆகிக்கொண்டுள்ளன. ஒன்று காணி பொலிஸ் அதிகாரம் சார்ந்தவை இன்னொன்று ஆளுநரின் அதிகாரம் மற்றொன்று இன்றைய பிரதம செயலாளரின் கடமைப்பாடு, கட்டுப்பாடு சார்ந்த விடயங்களாகும்.
மாகாண சபையின் முழுமையான உருவாக்கத்துக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை வட மாகாண முதல் அமைச்சர் ஜனாதிபதியி டம் பல்வேறு சந்தர்ப்பங்களில் விடுத்த போதும் அது கவனத்தில் கொள்ளப்படவில்லை.
இவ்விரு அதிகாரங்களும் மாகாண சபைக்கு வழ ங்க நாம் தயாரில்லையென்ற நிலைப்பாட்டினையே அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்து வந்துள்ளது. இதற்குரிய காரணம் இவ்விரு அதிகாரங்களையும் மாகாண சபைக்கு வழங்கி விட்டால் மத்திய அரசாங்கத்தின் அதிகாரத் தன்மை பலமிழந்துவிடும் மறுபுறம் வடக்குக்கான பூரண சுயாட்சிக்கு வழிவகுத்து விடுமென்ற அரசாங்கத்தின் பயப்பாடு காரணமாகவே வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கு இவ்விரு அதிகாரங்களையும் வழங்க அரசு மறுத்தது.
இதன் இன்னொரு முரண்பாடாக காட்டப்பட்டு வந்த விடயம் வட மாகாண ஆளுநராக சிவில் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். இராணுவ அதிகாரிகள் பொருத்தமானவர்கள் அல்லர் என்ற சுட்டிக்காட்டல்களை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உட்பட்ட தமிழ்த் தரப்பினர் செய்திருந்த போதும் அவை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அரசாங்கத்தால் உதாசீனம் செய்யப்பட்டன.
மாத்திரமன்றி வடக்கு மாகாண ஆளுநரின் பதவிக்காலம் முடிவுறும் தறுவாயில் புதிய ஆளுநராக சிவில் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் என்ற வாக்குறுதி மீறப்பட்டு மீண்டும் இரண்டாம் பருவ காலத்துக்கு வட மாகாண ஆளுநருக்கு நீடிப்பு வழங்கப்பட்டமை உட்பட்ட எல்லாக் கைங்கரியங்களும் மாகாண சபை முறையொன்றின் இயங்கு முறையை பல வீனப்படுத்தும் தடை செய்யும் நடவடிக்கைகளாகவே இருந்து வந்துள்ளது.
இத்தகைய தளம்பல் நிலைப்போக்கு நிலவி வரும் நிலையில்தான் பிரதம செயலாளருக்கு உத்தரவிடும் அதிகாரம் முதலமை ச்சருக்கு இல்லையென்ற உத்தரவை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
ஒரு மாகாண சபையின் நீதித்துறை நிர்வாகத்துறை சட்ட வாக்கத்துறை என்ற மூன்று துறைகளிலும் போதுமான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப் படவில்லையாயின் அம்மாகாண சபை முறையானது. ஒரு சமூகத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் அரசியல் தீர்வு என எவ்வாறு கூற முடியுமென்பதே கேள்வியாகும்.
நிர்வாக இயந்திரத்தின் பிரதம கருவியாக விளங்குபவர் பிரதம செயலாளர் என்பது சட்டத்தில் வரையறுக்கப்பட்ட விடயமாகும். நிர்வாகத்தின் பிரதம நிறைவேற்று வாண்மை கொண்ட செயலாளர் மாகாண நிர்வாகத்தை செம்மையாகக் கொண்டு செல்ல வேண்டுமாயின் அவரும் அவர் சார்ந்த அதி காரங்களும் கடமைகளும் மக்கள் மயப்பட்டதாக இருக்க வேண்டும்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு வருடன் உடன்பாடு காணப்படாத நிலை யொன்று இருக்குமானால் அது மாகாண சபையின் முழுமையை கெடுத்து விடுவதுடன் மாகாண சபை முறையின் மீது மக்களுக்கு அவநம்பிக்கையை உண்டு பண்ணும் காரியமாகவே ஆகிவிடும் இந்த நிலையே இன்று உருவாகியிருக்கிறது என்பது வெள்ளிடை மலையாகும்.