நல்லூரில் காவடி ஆடிய 51 ஆவது படையணி -காணொளி இணைப்பு
ஜெனிவா நெருக்குவாரங்களின் மத்தியில் வாத்திய மேளதாளங்களுடன் முத்திரை சந்தியினில் இறக்கப்பட்ட படைத்தரப்பு பக்தர்கள் ஊர்வலமாக நல்லூரிற்கு படையெடுத்திருந்தனர்.
பலரது கைகளினில் அர்ச்சனை தட்டுகள் கூட இருந்திருந்தன. பௌத்தர்களது அனுட்டானத்திற்கான ஆடையான வெள்ளை சாரங்களுடன் சிப்பாய்களும் வெள்ளை சேலைகளுடன் பெண் சிப்பாய்களும் ஆலயத்தை ஆக்கிரமித்துக்கொண்டனர்.
யாழ்.பருத்தித்துறை வீதியினூடாக அவர்களது காவடி ஊர்வலங்கள் நகர்ந்திருந்தன.நீண்ட நேரம் பயணித்த ஊர்வலத்திற்காக போக்குவரத்தை சீர் செய்வதில் இராணுவ காவல்துறையுடன் இணைந்து உள்ளுர் காவல்துறையினரும் பணியாற்றியிருந்தனர்.
வாகன போக்குவரத்துக்கள் தடுக்கப்பட்டுமிருந்தது வலிகாமத்தினில் நிலைகொண்டுள்ள 51 வது படைப்பிரிவை சேர்ந்த படையினரது இன்றைய நல்லூரிற்கான படையெடுப்பினால் உள்ளுர் பக்தர்களது வழிபாடு இன்று மணித்தியாலக்கணக்கினில் தடைப்பட்டு போயிருந்தமை தனியானதொரு கதையாகும்.