Breaking News

இன்றைய நாள் எப்படி 07.08.2014

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

இன்றைய நாள் எப்படி 07.08.2014


மேஷம் 

கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

ரிஷபம் 

சந்திராஷ்டமம் தொடங்குவதால் முடிவுகள் எடுப்பதில் தயக்கம், தடுமாற்றம் வந்து நீங்கும். கணவன்- மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

மிதுனம் 

சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

கடகம் 

எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

சிம்மம் 

குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்- பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

கன்னி 

பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

துலாம் 

உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொந்த- பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

விருச்சிகம் 

கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். உடல் நலம் சீராகும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்

தனுசு

ராசிக்குள் சந்திரன் நுழைவதால் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை

மகரம் 

சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்

கும்பம் 

எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்

மீனம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை