கரும்புலிகளுடன் ஒருநாள் ! என் மனத்தை உலுக்கிய சம்பவம் ! -அனுபவப் பகிர்வு
அது. வளவில் அமைந்திருந்த. 'கடல் புறா'. என்னும்' கடல். கரும்புலிகளின் முகாமுக்கு உளவியல் வகுப்பு எடுக்கவேண்டிய..அவசியத்தை சூசை எனக்கு சொன்னபோது அந்த பணியை எனது அரசியல் வேலைகளுடன் சேர்த்து நான் பொறுப்பு ஏற்றுக்கொண்டேன்.
அது ஆண்களுக்கான கரும்புலிமுகாம். அதுபோல் பெண்களுக்கான முகாம் ஒன்று பருத்திதுறைக்கு அண்மையில் இருந்தது கடலில் கப்பல்களையும் 'டோரா' போன்ற சிறிய ரக கப்பல்களையும் தகர்ப்பதற்கு இரும்பை விட உறுதிமிக்க இதயம் வேண்டும்.
அந்த உறுதியை எல்லோராலும் உடனே இலகுவில் பெற்றுவிட முடியாது .கரும்புலி தாக்குதல் என்பது புலிகள் அமைப்பில் உள்ள மிக முக்கியமான துறை இங்கே உள்ளவர்கள் ஏனைய துறைகளில் உள்ளவர்களிடம் இருந்து வேறுபட்டவர்கள். எதையாவது சாதிக்க வேண்டும் என்னும் வெறி உள்ளவர்கள். அதுவும் உடனடியாக...!
இவர்களை யாரும் வற்புறுத்தி இந்த அமைப்புக்குள் கொண்டு வருவதில்லை ஆனால்..அதற்கு மாறாக.. இயக்கத்துக்கு வந்த பெரும்பாலானோர்..தம்மை கரும்புலிகளுடன் இணைத்து கொள்ளும்படி தலைவருக்கு கடிதம் எழுதுவார்கள். அப்படி விரும்பியவர்களை பற்றிய குடும்ப, சமூக சூழலை தலைவர் தனது தளபதியுடன் கலந்து..ஆலோசித்து..விரிவாக ஆராய்வார்.
குடும்பத்தில் ஒரே அங்கத்தவர்கள் இருந்தால் நிச்சயம்...அவர்களுக்கு அந்த சாதனை செய்வதில் இருந்து பெரும்பாலும் விதிவிலக்கு அளிக்கபடும். ஏன் தெரியுமா..? அவர் இந்த மண்ணுக்காக போராடும் அதே வேளை தனது குடும்பத்திலும் ஒரு அங்கத்தவர் என்பதுதான் தலைவரின் எண்ணம். ஆனால்..அவர்கள் சாதாரண போராளிகளாக சேர்த்து கொள்ளபடுவார் .
கூடியவரை தாக்குதல் பிரிவுகளில் இருந்து இவர்களை போன்றவர்களை தூரத்தில்தான் வைத்திருப்பார்கள் தளபதிகள் வேறு வேலைகள் இவர்களுக்கு கொடுக்கபடும். அந்த கடல் கரும் புலிகளுக்கு உளவியல் வகுப்பு எடுக்க நான் சென்ற முதல் நாள் அது..!
உள்ளே சென்றதும் முதலில் நான் செய்த வேலை அவர்கள் எல்லோரையும் ஒருமுறை நோட்டமிட்டேன் ஏன் தெரியுமா..? எனக்கு மிக நன்கு பழக்கபட்டவர்கள் யாரும் அதில் இருக்கிறார்களா.? என்று அறிய...!..ஆனால்.. என்னை கண்டதும் சிலர தமது முகம்களை காட்டாமல் குனிய தொடங்கினர்.
அதனால் எனக்கும் அவர்களை பார்க்க வேண்டும்போல் ஆவல் வந்தது..அந்த வீர பெருமக்களின் முகம்களில் முழித்தாலே ஒருவித மகிழ்வு வந்தது போல் உணர்ந்தேன்.
பெரும்பாலும் அவர்களில் சிலர் எனது தூரத்து உறவு முறையானவர்கள். சிலர் எனக்கு வேண்டிய குடும்பத்து பிள்ளைகள். நண்பர்களின் பிள்ளைகள் அல்லது நெருங்கிய உறவினர்கள்..இப்படியானவர்கள்தான்.முகத்தை காட்ட மறுத்த பெருவேங்கைகள்.
ஆனால்..இவர்களை நான் எப்படி எனது வலைக்குள் விழுத்தினேன் எனபதை நினைக்க இன்று எனக்கு சிரிப்பாகவும் உள்ளது அதேவேளை வேதனையாகவும் உள்ளது. ஏன் தெரியுமா...? இவர்களில் பலர் அதன்பின் பல கரும்புலி தாக்குதல்களின்போது வீரசாவை தழுவி கொண்டவர்கள்.
வகுப்பு எடுத்து கொண்டிருந்தபோது எப்போதும் அவர்களிடம் கேள்விகள் கேட்பது எனது வழக்கம் அன்று நான் கேள்விகள் கேட்டதும் முகத்தை காட்ட மறுத்தவர்களிடம்தான். அப்போது பதில் அளித்த ஒரு கரும்புலியின் வீட்டில்தான்.
அன்று காலை இடியப்பமும் சொதியும் சாப்பிட்டுவிட்டு வந்திருந்தேன் எனக்கு வேண்டிய ஒரு நண்பரின் குடும்பம் அது. நான் போகும் வேளையில் எல்லாம் எப்போதும் அவர்கள் கேட்பார்கள்.. "தம்பி எப்படி இருக்கிறான்."..? என்று.." அவனுக்கு என்ன..? நல்லாக இருக்கிறான்.." என்று சொல்லி விடுவேன்.
அவர்களின் மனம் நோககூடாது என்பதற்கு ஆக ஆனால்.. இன்றுதான் அவனை நேரில் கண்டேன். அதுவும் ஒரு கரும்புலியாக...இதைபோய் எப்படி அவர்களிடம் சொல்ல முடியும்..? ஆனால்..நான் போகும் வேளையில் எல்லாமே அந்த நண்பனின் மனைவி எனக்கு சாப்பாடுதந்து அனுப்பாமல் விடமாட்டார்..
"இப்பதான் சாப்பிட்டு விட்டு வருகிறேன்". என்று சொன்னாலும் விடமாட்டார்கள். "நீங்கள் எங்களிடம் சாப்பிடுவது எங்கள். மகன் எங்களுடன் இருந்து சாப்பிடுவதை போல் உணர்கிறோம். "என்று சொல்வார்கள்.
அவர்களிடம் போய் உங்கள் மகன் கரும்புலிகளுடன் இணைந்து இருக்கிறான் எப்போது அவன் சாவை தழுவுவான் என்று சொல்ல முடியாது. எப்படி சொல்லமுடியும்..? எந்த முகத்தை வைத்து கொண்டு என்னால் சொல்லமுடியும்...?
ஆனால்..அந்த இதயத்தை சில்லிட வைக்கும் வேளையும் அன்று எனக்கு வரத்தான் செய்தது. கப்பல் ஒன்றை சுக்கு நூறாக்கிய கடல் கரும்புலிகளில் இந்த போராளியும் ஒருவன். தளபதி சூசை அரசியல் பொறுப்பாளர் என்ற வகையில் என்னைத்தான் சென்று அவர்களுக்கு. அறிவிக்கும்படி சொன்னபோது. நான்..ஒரு சிலைபோலவே நின்று கொண்டு இருந்தேன்.
இந்த செய்தியை ..சூசை .என்னிடம் சொன்னபோது....எனக்கு உடல் நடுங்கியது ...எத்தனை நாட்கள்..அந்த வீட்டில்..சாப்பிட்டு இருப்பேன்...? இந்த துயர செய்தியை சுமந்து செல்லவா..?..ஆனாலும் போனேன். நான்போன காட்சியை கண்டதுமே அந்த குடும்பம் கதறிய கோலத்தை பார்த்து எனக்கு மயக்கம் வரும்போல் இருந்தது.
ஆனால் ..உங்கள் மகனின் உடலை கூட எடுக்க முடியவில்லை என்று சொல்லியிருந்தால் எப்படி இருந்து இருக்கும் ..அவர்களுக்கு? இன்றுவரை அந்த குடும்பம் என்னை கண்டால் அதே பாசத்துடந்தான் பழகி வருகிறது. ..இப்படி ...என்னை உலுக்கிய சம்பவங்கள்தான் ..இயக்கத்தில் நான் இருந்தபோது ..எத்தனை ..எத்தனை ..?.வார்த்தைகளால் வடிக்க முடியாதவை அவை ...
மு வே .யோகேஸ்வரன்