மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் விபத்தில் படுகாயம்
வாகன விபத்து ஒன்றில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வடக்கு மாகாண சபை உறுப்பினர் தனது வாகனத்தில் கோப்பாய் பகுதியில் சென்று கொண்டிருந்த போது டிப்பர் வாகனம் ஒன்றினை விலத்திச் செல்ல முற்பட்ட வேளை விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன் போது படுகாயம் அடைந்த சுகிர்தன் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நோயாளர் காவுவண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.