குற்றமே அற்றவர்களாம்! அனைத்து சிப்பாய்களும் விடுதலை!!-காரைநகர் சம்பவம்.
உட்படுத்திய சந்தேகத்தினில் ஆஜர் படுத்தப்பட்ட கடற்படை சிப்பாய்களை இன்று சிறுவர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
கடற்படை சீருடையினில் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்ட ஏழு கடற்படை சிப்பாய்களுள் சந்தேக நபரை அடையாளம் காட்ட பாதிக்கப்பட்ட சிறுமி தவறியிருந்தார்.
அதையடுத்தே கடற்படை சிப்பாய்களை விடுவிக்க சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதும் நேற்றைய தினம் அவர்களின் குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததோடு வரவழைக்கப்பட்ட 7 சிப்பாய்களும் இந்த சம்பவத்துடன் தொடர்பற்றவர்களாக இருக்கலாம் என்றும் அறிய வருகிறது.
சந்தேகத்திற்கிடமான ஒட்டுக்குழுவை சேர்ந்தவர்கள் அவர்களது வீட்டிற்கு சென்று இதை பெரிது படுத்த வேண்டாம் என்றும் கோரியிருந்தனர் என நேற்று சென்ற த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அப்பகுதி மக்கள்தெரிவித்திருந்தனர்.
முன்னதாக குறித்த பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டிற்குள்ளாக்கியதாக கைதான கடற்படைசிப்பாயை தடுத்து வைக்க உத்தரவிட்ட நீதிபதி அடையாள அணிவகுப்பை நடத்த முடியாதென தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து பதில நீதிபதி முன்னிலையினில் கடற்படையினரென தெரிவித்து எழுவரை காவல்துறை முற்படுத்தி அடையாள அணிவகுப்பினை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது
கண்டன ஆர்ப்பாட்டம்.
இன்று வெள்ளிக்கிழமை காரைநகர் பிரதேச செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரும் ஊரிக்கிராம மக்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன், தமிழ்த் தேசியமக்கள் மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் என பெருந்தொகையானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் தாங்கியவாறு கோஷங்களையும் எழுப்பினர்.
புகைப்படங்கள்-தீபன்