Breaking News

புலிகளின் தளபதி சிறையில் இருந்து வெளிவந்த தந்திரம்..எப்படி?


மட்டக் களப்பு மாவட்ட தளபதியாக எண்பதுகளில்
இருந்தவர் அருணா.. அவரும் வேறு சில போராளிகளும் படகில் நடுக்கடலில் செல்லும் போது ஓர் நாள் ஏற்பட்ட சண்டையில் படகு தாக்குதலுக்கு உட்பட்டு பிரிந்து விட்டது.அதில் சிலர் வீர மரணம் அடைந்தனர்.

படகில் சென்ற அனைவரையும் வீர மரணம் அடைந்தவர்களாகவே விடுதலைப் புலிகள் அமைப்பு பதிவு செய்திருந்தது . அதே வேளை ஸ்ரீலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட மோதல் ஒன்றின்போது ஒரு சில சிங்கள இராணுவத்தினர். போர்க் கைதிகளாக புலிகளால் பிடிக்கப்பட்டிருந்தனர்.

1986 இல் யாழ் மாவட்ட தளபதியாக இருந்தவர் கேர்ணல் கிட்டு அவர்கள். அப்போது கோட்டை முகாம் சிங்களத் தளபதியாக இருந்தவர்,கப்டன் கொத்தலாவலை. கைதிகளைப் பரிமாற்றம் செய்யும் ஓர் நிலைக்கு புலிகளும் சிங்கள இராணுவத்தினரும் வந்தனர். அப்போது இரண்டு பக்கங்களிலும் இரு கைதிகள் வீதம் பரிமாறிக் கொள்வது என்று முடிவாயிற்று.

புலிகளிடம் சிங்களச் சிறையில் இருந்த ஒரு சில கைதிகளின் பெயர்கள் அறிவிக்கப் பட்டன. அப்போது அந்த பட்டியலை கிட்டு அவர்கள் பார்வையிட்டார். அதன்படி இரு நபர்களின் பெயர்களை கோட்டை இராணுவத்திடம் கொடுத்தார். அவர்களை யாழ் கோட்டை முகாம் வாசலில் கொண்டுவந்து சிங்கள இராணுவம் விட்டது.

அப்போது தளபதி கிட்டு உட்பட பல முக்கிய போராளிகள் அங்கு சென்று விடுவிக்கப் பட்ட போராளிகளை அழைத்து வந்தனர். என்ன ஆச்சரியம்? அவர்களில் ஒருவர் மட்டு- அம்பாறைத் தளபதியாக இருந்த அருணா. மற்றது காமினி என்பவர். அருணா எப்போதோ கடலில் படகு சண்டையின்போது வீரச் சாவடைந்து விட்டார் என்று பதிவிட்டிருந்த இயக்கம், அருணா உயிருடன் திரும்பி வருவதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தது.

அதிலும் அருணாவுடன் பயிற்சி பெற்ற போராளிகள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். முதலில் தளபதி கிட்டு கூட அதிர்ச்சி அடைந்தார். ராணுவம் அனுப்பிய பட்டியலில் அருணா என்ற பெயரே இல்லை. ஆனால், அருணாவின் உண்மைப் பெயர் கிட்டுவுக்கு தெரிந்திருந்ததால் அருணா வெளியில் வரும்வரை அந்தச் செய்தியை முக்கிய போராளிகளுக்கு கூட சொல்லாமல் வைத்திருந்தார் கிட்டு.

அதே வேளை , ஒரு மாவட்ட தளபதியை விடுவிப்பது சிங்கள இராணுவத்துக்கு இறுதிவரை தெரியாமல் இருந்ததே ஆச்சரியம்தான். அதைவிட ஆச்சரியம் தனது இயக்கப் பெயரை இறுதிவரை இராணுவத்துக்கு வெளிப் படுத்தாமல் இருந்த அருணாவின் திறமைதான்.

வரலாறுகளை யாராலும் அழிக்க முடியாது. திருத்தி எழுதவும் முடியாது. அருணாவை தளபதி கிட்டு உட்பட போராளிகள் அழைத்து வரும்போது எடுத்த படம் இது!

நினைவில் இருந்து அழியாத நாட்களில் ஒன்று இது!

முன்னைய பதிவுகளுக்கு