Breaking News

போராட்ட காலத்தில் ஓர் இனிய நினைவு-தொடர்


இந்திய ராணுவம் ஈழத்தில் சண்டையை தொடங்கிய
நேரம் புலிகளின் அரசியலாலோசகர் டாக்டர் அன்டன் பாலசிங்கம் அவர்கள் ஈழத்தில்தான் இருந்தார்..

அவரை பல சுற்றி வளைப்புகளில் இருந்து காப்பாற்றுவது அவர்களின் மிக பெரிய பணியாக இருந்தது..தலைவரின் கண்டிப்பான உத்தரவு காரணமாக ஒவ்வொரு போராளியும் அந்த பணியில் தம்மையே அற்பணித்து கொண்டார்கள் ....

அப்படி இருந்தும் அவரின் வயது காரணமாக.அவரால் சுற்றி வளைப்புகளில் இருந்து தப்பி மீள்வது என்பது பல வேளைகளில் மிக எளிதாக இருக்கவில்லை.. ஆனால்..எமது வீர இளைஞர்கள் விடுவார்களா அவரை வேதனை பட?..

பலமுறை அவரின் அனுமதி இல்லாமலே அவரை ஒரு குழந்தைபோல் முதுகில் சுமந்து ஓடி சென்று காத்தார்கள் என்றால் பாருங்கள் ..எங்கள் போராளிகளின் உறுதியை.?.கடமையில் அவர்கள் வைத்து இருந்த விசுவாசத்தை?..

இறுதியில் அவர் படும் வேதனைகளை உணர்ந்த தலைவர் எப்படியாவது அவரை இந்தியாவுக்கு அனுப்பும்படி முக்கிய தளபதி ஒருவரை பணித்தார்..அவர் போகும்போது கூட கடல் அமைதியாக இல்லை..ஆனாலும்..எப்படியோ அவர் சென்னை போய் சேர்ந்துவிட்டார்..

இந்திய 'ரோவுக்கு' பாலா அண்ணர் மீது எப்போதும் ஒரு கண் இருந்தது..பாலா அண்ணரை எப்படியாவது பிடித்துவிட்டால்....பிரபாகரனை சரணடைய வைத்துவிடலாம் என்று பகல் கனவு கண்டது.'.ரோ' ஆனால்..தலைவர் அவர்களின் தீர்க்க தரிசனம் காரணமாக..பாலா அண்ணரையும் பிடிக்க முடியவில்லை..

தலைவரையும் பிடிக்க முடியவில்லை இறுதிவரை அவர்களால்..பாலா அண்ணர் சென்னையில்தான் இருந்தார்..அவர் எப்படியும் கிட்டு அண்ணாவை சந்தித்து ஆகவேண்டும் என்னும் சூழ்நிலையில் அப்போது இருந்தார்..

ஆனால் பாலா அண்ணர் மீது கண்வைத்து இருக்கும் ரோ வின் கண்களில் மண்ணை தூவி அவரால் அது எப்படி முடியும்..? கிட்டண்ணாவுக்கு ஒரு போரளிமூலம் செய்தி அனுப்பினார் பாலா அண்ணர்....உடனே கிட்டண்ணாவின் மூளை வேலைசெய்தது..

சிங்கத்தின் குகைக்குள்ளேயே போய் சிங்கத்தை சந்திப்பது என்பதுதான் அந்த திட்டம்,..யார் சிங்கம்?அப்போது றோவின் பிரதிநிதிகளாக அங்கே காவல் காக்கும் கியூ(ரோ) தான்.!.தனது திட்டத்தை பாலா அண்ணருக்கு மிக ரகசியமாக சொல்லியனுப்பினார் கிட்டண்ணா..

அதன்படி ஒருநாள் ..இரவின் ஆரம்பம் அது..கியூவினருக்கு அன்று நல்ல பிரியாணி ஐஸ் கிரீம் எல்லாம் தடல் புடலாக இருந்தன..அதுமட்டுமல்ல..எம்.ஜி.யார்(நம்ம வாத்தியார் தானுங்கோ) நடித்த புது படங்களை எங்கோ தேடி கொண்டுவந்தார்கள் பையன்கள்..

அவர்களின் வீட்டுக்கு அடுத்த வீட்டில் பாலா அண்ணர் வந்து இருந்தார்....கியூ காரர்கள் தம்மை மறந்து பிரியாணியிலும் புது படத்திலும் மூழ்கி இருந்தவேளை பக்கத்து வீட்டு மதில்மேல் பாலா அண்ணரை கொண்டுவந்து சேர்த்தார்கள் போராளிகள்- ஒன்றல்ல இரண்டல்ல.. பல மணி நேரம் மிக ஆறுதலாக அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள்..அன்பர்களே.!.

அதுதான் கிட்டண்ணா.. இராஜ தந்திரமும், வீரமும் ஒருங்கே அமையப் பெற்ற ஒரு முரட்டுப் புலி அவர்..வேறு வார்த்தை எனக்கு இங்கே வரவில்லை ! அப்படியான வீரமறவர்கள் இன்று எங்கே..இருக்கின்றார்கள்.? பொறுத்திருங்கள்..காலம் பதில் சொல்லும்..

"அன்னை தமிழே...
அழகுமணி தொட்டிலே.!
என்னை ஈன்ற ஈழ மணி திருநாடே!..
கன்னல் தமிழின் காவிய நாயகனை
கனிவோடு பெற்றெடுத்த கோயிலே.!
உன்னை நினைத்து எத்தனை நாள் ஏங்வது ?..
வண்ண தமிழே ..உன்கையில் ..
வளை காப்பு போடவொரு
சின்ன மகன் துடிக்கின்றான்..
சிரியம்மா தாயே..நின்று.!
பொன்னான போராளிகள்
உன்னை கண்ணாக காப்பார் திண்ணம் இது...!.

(தொடரும்)

இன்னும் இப்படி பல சுவையான சம்பவங்கள் மட்டுமல்ல ..வரலாறின் இனிய பக்கங்கள் உங்களுக்காக தர காத்திருக்கிறேன்..அதுபோல் எனது அன்பான போராளிகளுக்கு ஒரு வேண்டுகோள்..எனது E-மெயில் மூலம் உங்களிடம் உள்ள மிக முக்கிய தவகல்களை தந்து உதவுங்கள்....பயன் உள்ள ஆவணமாக இக்கட்டுரையை மாற்றி விடலாம் ..சரிதானா?

எனது சுவரில் எனது ஈமெயில் முகவரி உண்டு...அல்லது முகநூல் தனிப்பட்ட தகவல் மூலம் அனுப்புங்கள்!

-மு .வே.யோகேஸ்வரன் -

முன்னைய தொடர்கள்