கொலைக்கு பல்கலை நிர்வாகம் காரணமா? பல்கலை மாணவனின் சடலம் மீட்பு!
தூக்கித் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா சுந்தரபுரத்தைச் சேர்ந்த யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட 3ஆம் ஆண்டு மாணவனான சிவலிங்கம் யசோதரன் (வயது24) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் நாச்சிமார் கோவிலடி தலையாளி வீதி, யாழ்ப்பாணம் என்றும் முகவரியில் வாடகை அறையில் தங்கியிருந்து கல்வி பயின்று வருபவர் என்றும் நேற்று இரவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
மரணத்திற்கு பல்கலை நிர்வாகம் காரணமா?
வவுனியா சுந்தரபுரத்தைச் சேர்ந்த குறித்த மாணவர் நாச்சிமார் கோவிலடிப் பகுதியில் வாடகை அறையில் தங்கியிருந்து கல்வி பயின்று வருபவர் என்றும் நேற்று இரவே (03.07.14) இந்தச் சம்பவம் இடம்பெற்று உள்ளதாகவும் சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக தற்கொலைக்கு முயன்று கைகளினை பிளேடினால் அறுத்துக்கொண்ட அவர் அது பலித்திராத நிலையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.
தேர்ச்சிபெறத் தவறிய பாடமொன்றிற்கான மீள்பரீட்சையில் தோற்ற நிர்வாகம் தொடர்ந்தும் அனுமதி மறுத்து வந்திருந்த நிலையில் விரக்தி அடைந்து அந்த தாணவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.
யாழ்.பல்கலையில் இத்தகைய மாணவ தற்கொலைகள் தற்போது சாதாரணமாகியுள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. சுக மாணவர்களால் தெரிவிக்கப்படும் இந்தக் குற்றச்சாட்டுக் குறித்து பவ்கலைக்கழக நிர்வாகம் பதிலளித்தால்