Breaking News

வீரன் வருவான்.. வெல்லும் தமிழ் ஈழம்..!


வீரன் வருவான்.. வெல்லும் தமிழ் ஈழம்..!
**********************************
ஐம்பத்தி எட்டில் அடித்தான் சிங்களவன்
பாட்டனுக்கு தைரியம் வரவில்லை தட்டிக் கேட்க..!
ஜெம்பட்டா தெருவில் 'ரம்புட்டான்' பழங்கள் 
விற்றவன்கூட அகப்பட்டதை 
எடுத்து அடித்து விரட்டினான் நம்மினத்தை..!

'தெம்பிலி' விற்றவன்கூட கொழும்புத் தெருக்களில்
இளநீரை சீவுவதுபோல் இளந்தமிழர் தலைகளை சீவினான்!
பொம்பிளையளின்ரை சீலைகளை அவிழ்த் தெறிந்து
சின்னா பின்னப் படுத்தினான்..
கம்பளை.. கண்டி.. காலி.. மாத்தறையிலும் ..
மழைநீர்போல் ஓடியது மறத் தமிழர் குருதி!

அப்ப..
எங்கையடா போனது உங்கள் சமஷ்டிக் கொள்கை?-உங்கள்
தங்கைகளும் அக்காக்களும்
கொங்கைகளை இழந்து கும்பிட்டபோதும்
விட்டானா வேசி மகன்..ரோஜா இதழ்களைக் கசக்கி எறிந்தான்..

நீங்கள் அப்போது எங்கே போனீர்கள்?
மங்கையர்க் கரசிகளுக்கு மஞ்சள் அரைத்துப்
பணி புரியவா போயிருந்தீர்கள்? இவற்றைத் தடுக்க
பிரபாகரன் ஆயுதம் ஏந்தினால்.. அது பயங்கர வாதமா?

விளைமீன்கள் வந்திறங்கிய பெட்டிகள் 
திரும்பி யாழ்ப்பாணம் போனபோது;தமிழர் தலைகளை
மலை மலையாய்க் குவித்து வைத்து அவைகளில் நிரப்பி
அனுப்பினான் அரக்கன்..!

அறுபதுகளில் ..தமிழரின் அரசுக் கட்சிகள் 
ஒன்றுசேர்ந்து அணியணியாய் வீதிகளில்
ஊர்வலம் போயினர்.. 
உருவந்த வயிரவர்கோயில் பூசாரிபோல் உரக்கக் கத்தினர்....
"துப்பாக்கிக் குண்டு விளையாட்டுப் பந்து"..
அட விசர் நாய்களே நீங்கள் எல்லாம் இன்றெங்கே?

"அடிமைத் தழையை ஒழிப்போம்"என்று -வெற்று
வெடித் தமிழர்கள் கோசம் போட்டனர்.. அப்போது
நாசம்செய் சிங்களவன் அப்புகாமி தலைமையில் முதுகில்
'அப்பு அப்பென்று'அப்பி அனுப்பி விட்டான் அவர்களை!

என் அப்புவும் அதிலொருவர்.. உப்புமஞ்சள்
நல்லெண்ணெய் சேர்த்துப் போட்ட 'பத்தில்'..
அவர் எழும்பிவர ஆறுமாதம் ஆனதாம்
என்று ஆச்சி சொல்லிச்சுது..!

வாய் வீச்சு 'விசுக்கோத்துகள்
வாங்கிக் கட்டினதுதான் மிச்சம்
தூக்கவில்லை அப்போதும் துப்பாக்கி
செம்மறிக் கூட்டம்!

அட..அப்போது துப்பில்லை யாருக்கும் தட்டிக் கேட்க
மரக்கொப்பில் இருந்து மந்தி.. குருவிக் கூடுகளை
கலைத்தெறிந்து குஞ்சுகளைக் அழித்தபோது
'துப்பாக்கிக் குண்டு விளையாட்டுப் பந்து' எங்கே போனது..?

தட்டிக் கேட்கவொரு பிரபாகரன் வந்தான்..
பட்டி மாடுகள்போல் வாழ்ந்த தமிழ் இனத்துக்கு
தன்மானம் என்றால் என்னவென்று
தக்கதோர் பாடம் புகட்டினான்!

முட்டிக் கொம்புகளால் குத்தி அழித்துவந்த
மூர்க்கக் காட்டெருமைக் கூட்டம் ;தறி
கெட்டுத் தடுமாறி ஓடியது. அவன்
விட்ட இடத்தில் அப்பணியைத் தொடர்வோம் 

வீரன் வருவான்..வெல்லும் தமிழ் ஈழம்..!

-மு.வே.யோகேஸ்வரன்-