இந்திய இராணுவத் தளபதியை சட்னி போடத் துடித்த ஈழத்துப் பெண்கள்!
இருந்த காலம் என்பது,ஈழப் போராட்ட வரலாற்றில் கருப்பு ஆடுகள் புகுந்த காலம் என்று நான் அடிக்கடி நண்பர்களுக்கு அப்போது சொல்வதுண்டு.
ஆயினும் நாம் ஒவ்வொரு இந்தியப் போர் வீரனையும் மதித்தோம்,சண்டைக்கு முன்னர்! திலீபன் உண்ணா நோன்பை ஆரம்பித்த சில நாட்களில் அவனது உடல் நிலை மயக்க நிலையை அடையும் தறுவாயில் இருந்த நேரம் அது! போராளிகளும் ஈழ மக்களும் புழுவைப்போல் வேதனையால் துடித்துக் கொண்டிருந்த நேரம் அது.
அப்போது யாழ் கோட்டை இந்திய இராணுவ முகாம் பொறுப்பாளராக இருந்தவர் கேர்ணல் பரார் என்பவர் ஆகும். திலீபனின் நிலை பற்றி அறிந்து மேலிடத்துக்கு அறிக்கை அனுப்பும் நோக்கில், திலீபனைப் பார்க்கும் நோக்கில், நல்லூர் வீதிக்கு வந்து கொண்டிருந்தார்.எமது மக்களோ இலட்சக் கணக்கில் நல்லூரில் திலீபனைச் சுற்றி இருந்தனர்.
பலரது கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது. இந்த நிலையில் இந்திய இராணுவத் தளபதி ஒருவர் வருவதை எமது மக்கள் விரும்பவில்லை. குறிப்பாக பெண்கள் கொதித்து எழுந்தார்கள். ஆவேசப் பட்டார்கள் ! "அவன் கொஞ்ச தூரம் உள்ளே வரட்டும் விடுங்கோ. ஆண்கள் ஒருவரும் ஒன்றும் செய்யாதீர்கள்,போராளிகள் நீங்களும் ஒன்றும் செய்யாதீர்கள்,நாங்கள், பெண்களே அவனை இந்த நல்லூரின் வீதியில் பலியெடுத்து விடுகிறோம் என்று வரிந்து கட்டிக் கொண்டு நின்றார்கள்.
அப்போது ஒலிவாங்கி எனது கையில் இருந்தது. அப்போது அரசியல் துறைப் பொறுப்பாளரிடம் இருந்து எனக்கு அவசரம் அவசரமாக ஓர் செய்தி வந்தது,பொது மக்களைக் கட்டுப்பாட்டுடன் இருக்க சொல்லுங்கள்,அவனை வர அனுமதிக்கும்படி கூறவும்,அவனுக்கு யாராலும் எந்தவித தீங்கும் ஏற்படக் கூடாது என்று கூறுங்கள்,என்று என்னிடம் சொல்லப் பட்டது. நான் ஒலிவாங்கியில் அதை இப்படிக் கூறினேன்; "அன்பார்ந்த எமது தமிழ் ஈழ மக்களே! கோட்டை இராணுவ முகாம் பொறுப்பு அதிகாரி திலீபனைப் பார்க்க தயவு செய்து அனுமதியுங்கள்.
உங்கள் உணர்வுகள் எமக்குப் புரிகிறது,ஆனால்,நிராயுத பாணியாக எம்மை நோக்கி வரும் ஒருவரை தாக்குவதோ ,அல்லது அவமானப் படுத்துவதோ சரியானதல்ல அது.... புலிகள் பயங்கர வாதிகள் என்னும் அவர்களின் கருத்துக்கு வலுச் சேர்த்துவிடும். தயவு செய்து அமைதியாக இருங்கள் " என்று கூறினேன்..என்ன ஆச்சரியம் ? பொருமிக் கொண்டிருந்த எமது மக்கள் அடங்கிப் போனார்கள்.
அன்று நாங்கள் பேசாமல் விட்டிருந்தால், அந்த இராணுவ அதிகாரியை சட்னி போட்டிருப்பார்கள் எங்கள் பெண்கள்.ஆனால், பின்னர் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்கும் ஏற்பட்ட சண்டையின்போது யாழ் மருத்துவ மனைக்குள் கேர்ணல் பரார் தலைமையிலான படையணிதான் நுழைந்து சுமார் 100 தமிழர்களைக் கொன்றதுடன் ,பல பெண்களைப் பாலியல் வன்முறைக்கும் உட்படுத்தியது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
நாம் நெருப்பாற்றையும் பொறுமையோடு நீந்திக் கடந்து வந்தவர்கள்!
-மு.வே.யோகேஸ்வரன்-
தொடர்புடைய செய்திகள்
தியாக தீபம் திலீபன்