கடவுள் இல்லை என்றவர் பொறியியலாளர் மனநல மருத்துவமனையில்
நைஜீரியாவில் கடவுளை தான் நம்பவில்லை
என்று அறிவித்த ஒருவரை, உளநல மருத்துவமனையில் கட்டாயமாக சேர்த்துள்ளது குறித்து மனிதநேயர்கள் மற்றும் நாத்தீகர்களுக்கான உலக மட்டத்திலான அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
என்று அறிவித்த ஒருவரை, உளநல மருத்துவமனையில் கட்டாயமாக சேர்த்துள்ளது குறித்து மனிதநேயர்கள் மற்றும் நாத்தீகர்களுக்கான உலக மட்டத்திலான அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
29 வயதான முபாரக் பலா என்னும் அவரது நலன் குறித்தும் அந்த அமைப்பு கரிசனை வெளியிட்டுள்ளது. வடக்கு நைஜீரியாவின் கானு பகுதியைச் சேர்ந்த அந்த நபரை அவரது குடும்பத்தினர் அடித்து, உளநல மருத்துவமனையில் பலவந்தமாகச் சேர்த்துள்ளதாக சர்வதேச மனிதநேய மற்றும் அறநெறிப்பாற்பட்ட அமைப்பு கூறியுள்ளது.
அந்த அமைப்பைச் சேர்ந்த பமிடிலி என்பவர் இது குறித்து பிபிசியிடம் பேசுகையில், மருத்துவமனையில் உள்ள ஒரு மருத்துவர் ஏற்கனவே முபாரக்குக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என்று கூறிய பின்னரும் அவரை மருத்துவமனையில் தடுத்து வைத்திருப்பதாகக் கூறினார்.
''தனதுகருத்துவிசுவாசத்துடன்பகிரங்கமாகத்தெரிவித்ததுதான்அவர் செய்த ஒரேகுற்றம் என்று நான் நினைக்கிறேன். அவர் மருத்துவ மனைக்கு போகமறுத்த போது அவர்கள் அவரை கடுமையாக கையாண்டிருக்கிறார்கள்'' என்றும் அவர் கூறினார். ''நாங்கள் அங்கு ஒரு சட்டத்தரணியை அனுப்பினோம்.
ஆனால், அவரால் முபாரக்கை பார்க்க முடியவில்லை. அவரது குடும்பத்தினருக்கு அங்கு ஒரு செல்வாக்கு இருக்கிறது போல் தெரிகிறது. அதைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம்'' என்றும் அவர் குறிப்பிட்டார்.
முதல் டாக்டர் அவருக்கு எந்தவித குறைபாடும் கிடையாது என்று கூறியதை அடுத்து அவரை இரண்டாவது டாக்டரிடம் உறவினர்கள் கொண்டு சென்றிருக்கிறார்கள். இரண்டாவது மருத்துவரோ, முபாரக்கின் குணாதிசயத்தில் ஏற்பட்ட மாற்றத்தினால் தான் அவர் கடவுள் இல்லை என்று கூறுகிறார் என்று தெரிவித்துள்ளார்.
ஒரு இரசாய பொறியியலாளரான முபாரக், தனக்கு உதவுமாறு மருத்துவமனையில் இருந்து செயற்பாட்டாளர்களை கோரியுள்ளார் கானு பெருமளவில் முஸ்லிம்களின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு பகுதி. அங்கு 2000 ஆம் ஆண்டு முதல் முஸ்லிம்களின் சரியா சட்டம் அமுலில் உள்ளது.