பிரியாமணியின் ரகசிய காதலன் யார்?
என்ற சஸ்பென்ஸ் உடைந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பருத்திவீரன், தோட்டா, ராவணன் போன்ற படங்களில் நடித்துள்ள பிரியாமணி பின்னர் தமிழ் படங்களில் கவனத்தை குறைத்துக்கொண்டு மலையாளம், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த 2012ம் ஆண்டு சாருலதா என்ற தமிழ் படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழில் வந்த வாய்ப்புகளை ஏற்கவில்லை. இந்நிலையில் பிரியாமணி காதல் வலையில் விழுந்திருப்பதாகவும் தனது ரகசிய காதலனை அடிக்கடி சந்தித்து பொழுதை கழிப்பதாகவும் தகவல் வெளியானது.
இதற்கு பதில் அளித்த பிரியாமணி,இந்த விஷயத்தை நான் மறுக்கவும் விரும்பவில்லை. ஏற்கவும் விரும்பவில்லை. சரியான நேரம்வரும்போது இதுபற்றி பகிர்ந்துகொள்வேன் என்று பட்டும்படாமல் பதில் அளித்தார். சில தினங்களுக்கு முன் சேன்டல்வுட் நடிகர் கோவிந்த் பத்மசூர்யாவுடன் பிரியாமணி நெருக்கமாக நின்று போஸ் கொடுத்த புகைப்படம் வெளியானது.
இதை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட கோவிந்த் பிரியாமணியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் அருமை. அடிக்கடி இதுபோல் இருவரும் புகைப்படம் எடுத்துக்கொள்வோம் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதையடுத்து பிரியாமணியின் ரகசிய காதலன் இவர்தானோ என்று திரையுலகில் பரபரப்பாக பேச்சு எழுந்துள்ளது.