Breaking News

சொத்துக்களை கொள்ளையடித்தவர்களுக்கு அமைச்சரவைப் பாதுகாப்புப் -விஜித தேரர்


இந்நாட்டில் தற்போது குருதி பூஜை நடத்துமளவுக்கு
விகாரமான வெறிபிடித்தவர்கள் அரசாங்கத்தினுள் இருப்பதாக வட்டரக்க விஜித தேரர் குற்றம் சாட்டியுள்ளார். ஜாதிக பல சேனாவின் தலைவர் வட்டரக்க விஜித தேரர், பொதுபல சேனாவின் அடாவடிகளை எதிர்த்து தைரியமாக குரல் கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் அண்மையில் கடத்தப்பட்ட அவர் கடும் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். எனினும் அவரை யாரும் தாக்கவில்லை என்றும், தன்னைத் தானே தாக்கிக் கொண்டுள்ளதாகவும் போலியான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் கைது செய்யப்படுவதற்கு சற்று முன் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில், கற்கால மனிதர்கள் போன்று குருதி பூஜை நடத்துமளவுக்கு எனக்கு மனோ விகாரம் கிடையாது.

   

 அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் தான் அவ்வாறான வெறி பிடித்துள்ளது.

அதன் காரணமாகவே எதுவித குற்றமுமற்ற, நாட்டின் அமைதிக்காக, இன நல்லிணக்கத்துக்காக குரல் கொடுத்த என்னைக் கைது செய்துள்ளார்கள். அளுத்கமையில் இனக்கலவரத்தை மூட்டி அப்பாவிகளின் சொத்துக்களை கொள்ளையடித்தவர்களுக்கு அமைச்சரவைப் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு அளித்துள்ளார்கள். இதுதான் இந்நாட்டின் இன்றைய நிலை.

எனினும் சிங்கள, தமிழ், முஸ்லிம்களின் இன நல்லிணக்கத்துக்கான எனது முயற்சிகளை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் பொலிசாரின் குற்றச்சாட்டின் பேரில் எதிர்வரும் இரண்டாம் திகதி வரை வட்டரக்க விஜித தேரரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..