Breaking News

அளுத்கம, பேருவளை பிரதேசங்களின் பேரினவாதிகளின் அடாவடி -காணொளி

பதற்ற நிலைமையை தடுக்க இராணுவத்தின் உதவி பெற்றுக்கொள்ளப்பட
உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வன்முறைகளை தடுக்கும் நோக்கில் களுத்துறையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அளுத்கம, பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகள் போன்று மீளவும் ஏற்படுவதனை தடுக்க இராணுவத்தின் உதவியை பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இங்கு இடம் பெற்ற கலவரத்தின் ஆரம்பத்திலும் பின்னரும் வெளிவந்துள்ள சில காணொளிகள் உங்கள் பார்வைக்காக.
மருந்தகம்ஒன்று தாக்கப்படுவதும் அங்கிருந்தவர்களை அடித்து விரட்டியதோடு ஓடி ஒழித்தவர்கள்மீது உடலில் பட்டால் எரியும் குண்டை வீசிவிட்டு செல்லும் சிங்கள பேரினவாத சக்த்திகளும் அதனால் தீப்பிடித்தபடி ஓடும் சிறுபான்மை சமூகமும்.

அளுத்கம சம்பவத்தில் சஹீதான சகோதரரின் மைய்யத்து தொழுகை இஸ்லாமிய சொந்தங்கள் கதறி அழும் காட்சி!





இன வெறி காடையர்களால் தெஹிவளை ஹாகோஸ் - மருந்து கடை தாக்குதல்