Breaking News

பிரித்தானியாவில் குடும்பமாக வாழும் உறவுளில் ஈழத்தமிழர் 2ஆம் இடத்தில்


பிரித்தானியாவில் பல இனத்தவர்கள் வசித்து
வருகிறார்கள். இவர்களில் எந்த இனத்தவர்கள் திருமணம் முடித்து தம்பதிகளாகவும் மற்றும் குடும்பங்களோடு ஒன்றிணைந்து வாழ்ந்து வருகிறார்கள் என்று ஒரு கணக்கெடுப்பை, ஆங்கில ஊடகம் ஒன்று நடத்தியுள்ளது.

ஆங்கிலேயர், இந்தியர்கள், ஆக்பானிஸ்தானியர்கள், ரொமேனியர்கள் என்று நூற்றுக்கணக்கான இனத்தவர்கள் பிரித்தானியாவில் வாழ்ந்து வருகிறார்கள். இருப்பினும் இவர்களில் இந்தியர்களே 85 வீதமானவர்கள் மணம் முடித்து மற்றும் குடும்பங்களோடு பின்னிப்பிணைந்து வாழ்கிறார்கள் என்றும், இவர்களுக்கு அடுத்தபடியாக ஈழத் தமிழர்கள் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

அதாவது 84 சதவீதமான ஈழத் தமிழர்கள் திருமணம் முடித்து தமது குடும்பங்களோடு வாழ்ந்து வருகிறார்கள். இது என்ன பெரிய விடையம் என்று நீங்கள் நினைப்பீர்கள். ஆம் இது ஆங்கிலேயர்களை பொறுத்தவரை நிச்சயம் பெரிய விடையம் தான். ஏன் என்றால் ஆங்கிலேயர்கள் பாய் -பிரன் மற்றும் கேள் பிரன்ஸாக மட்டுமே வாழ்ந்துவிட்டு சென்றுவிடுகிறார்கள். அவர்கள் திருமணம் முடிப்பதே இல்லை.

திருமணம் முடிப்பது என்பது , ஒரு கைதியைப் போல வாழ நேரிடும் என்றும் அது ஒரு சிறைச்சாலைக்கு செல்வது போன்றது என்பதுமே அவர்கள் கருத்தாக உள்ளது. அத்தோடு திருமணம் முடிக்காமல் இருந்தால், பிரித்தானியாவில் தம்பதிகள் ஒவ்வொருவரும் தனித்தனியாக தமக்கான சோஷல் காசுகளை பெற்றுகொள்ளலாம்.

ஆனால் திருமணம் முடித்தால் கணவன் மனைவிக்கு என்று தனி தனியாக காசு கொடுக்க மாட்டார்கள். அதாவது பெனிவிட் காசை நினைத்தே ஆங்கிலேயர்கள் இவ்வாறு திருமணம் முடிக்காமல் வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

எது எவ்வாறாயினும், ஈழத் தமிழர்கள் 84 சதவீதம் இப்படி இருக்கிறார்கள் என்பது பெரிய விடையம் அல்லவா ? தமது சொந்த நாட்டை விட்டு அவர்கள் பிரிந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் வாழ்ந்து வந்தாலும், தமது பழக்க வழக்கங்களை அவர்கள் இன்னும் மாற்றவும் இல்லை. அவர்கள் சந்ததிகளும் அதனையே பின் தொடர்கிறார்கள் என்பது பெருமையான விடையம்.