இன்றைய நாள் எப்படி 26.06.2014
இன்றைய நாள் எப்படி
தின பலன்
மேஷம்
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் ஒத்துழைப்பார்கள். நண்பர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். முகப் பொலிவு கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சகோதர வகையில் நன்மை கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
ரிஷபம்
மாலை 4 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எதிர்பார்த்த காரியங்கள் முடியாவிட்டாலும், எதிர்பாராத வேலைகள் முடிவடையும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து தடைப்பட்ட வேலைகள் முடியும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
மிதுனம்
குடும்பத்தினரிடம் கோபத்தை காட்ட வேண்டாம். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். மாலை 4 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானித்து செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
கடகம்
வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மகிழ்ச்சி கிட்டும். தாயாரின் உடல் நிலை சீராகும். கணவன் -மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர்செய்வீர்கள். அரசாங்க காரியங்களில் அனுகூலமான நிலைக் காணப்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
சிம்மம்
மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டுமென நினைப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
கன்னி
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். உயரதிகாரி ஆதரிப்பார். நட்பு வட்டம் விரியும். தாழ்வு மனப்பான்மை நீங்கும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
துலாம்
மாலை 4 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. உறவினர், நண்பர்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மாலையிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
விருச்சிகம்
குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். மாலை 4 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
தனுசு
இன்றையதினம் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி யோசிப்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லைகள் விலகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வழக்குகள் சாதகமாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
மகரம்
குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். சகோதர வகையில் நன்மை கிட்டும். நவீன மின்னலை சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய கடன் தீரும். வெளிவட்டாரத்தில் கௌரவம் கிட்டும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
கும்பம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
மீனம்
பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். சகோதரர் பாசமழை பொழிவார். இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு