கல்முனையில் த.தே.கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பு
இன்றைய அரசியல் சூழலும் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின்
எதிர்கால நிலையும் எனும் கருப்பொருளில் இன்று கல்முனை வை.எம்.சீ.ஏ. கட்டிட கேட்போர் கூடத்தில் த.தே.கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு மக்களால் கேட்ககப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

இந்நிகழ்வானது கல்முனை மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர் அ.அமிர்தலிங்கம் தலைமையில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது.
இந்நிகழ்விற்கு த.தே.கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமத்திரன், பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர் கென்றி மகேந்திரன், சந்திரகாந்தன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான த.கலையரசன் மு.இராஜேஸ்வரன், பிரசன்னா, கருணாகரம். பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மாநகரசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.