சம்பூர் அனல் மின் நிலையத்தை திறந்துவைப்பாராம் மோடி!?
இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திரமோடி விரைவில்
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. திருகோணமலை – சம்பூரில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அனல்மின்னுற்பத்தி நிலையத்தை திறந்து வைப்பதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளலாம் என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த செவ்வாய் கிழமை நரேந்திரமோடியை சந்தித்த ஜனாதிபதி மகிந்தராஜபக்ச அவரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு நரேந்திரமோடி தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே ஜனாதிபதி மகிந்தராஜபக்ச, சம்பூர் அனல்மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மின்னுற்பத்தி நிலையம் இந்தியாவின் நிதியின் கீழ் நிர்மாணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.