வடக்கில் மாணவர்களை இராணுவத்திற்கு பிடிக்கும் படலம் ஆரம்பம்…
யாழ்.நகரப்பாடசாலைகள் சில உள்ளிட்ட ஒரு தொகுதி பாடசாலைகளினில்
கடேற் எனப்படும் இப்பயிற்சி மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாக தெரியவருகின்றது. இக்குறித்த பயிற்சிகள் பாடசாலையின் கற்பித்தல் நேரங்களிலேயே நடத்தப்பட்டும் வருகின்றன.
வடக்கினில் மீண்டும் பாடசாலை மாணவர்களிற்கு இராணுவப்பயிற்சி வழங்கும் நடவடிக்கை சத்தமின்றி ஆரம்பமாகியுள்ளது. விருப்பமான மாணவர்களிற்கே இப்பயிற்சி வழங்கப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார். எனினும் பாடசாலை மாணவர்;களிற்கு இராணுவத்தினர் பாடசாலை நேரத்தில் பயிற்சி வழங்குவதை அவர் மறுதலித்திருக்கவில்லை.
ஏற்கனவே பல்கலைக்கழகங்களிற்கு தெரிவாகின்ற மாணவர்களிற்கு இராணுவத்தளங்களில் பயிற்சி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்கின்ற நிலையில் பாடசாலை அதிபர்களிற்கு கேணல் தர பட்டம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.