Breaking News

திறந்த வெளி சிறைக்குப் பின் தொடர்கிறது பாரிய அழிவு! தமிழீழத் தீர்வில் மாற்றமில்லை: பேராசிரியர் இராமு மணிவண்ணன்

தமிழ் மக்களை அழித்த மகிந்த அரசு இன்று தமிழ் இனத்தை அழிப்பதற்கு நிலத்தையும்
இன்னும் பல பாரிய உத்திகளையும் நடைமுறைப் படுத்துகிறது. அதற்கு தமிழ் இன அழிப்பை முடித்த மகிந்த அரசு என ஆதாரத்துடன்  கூறுகிறார் பேராசிரியர் இராமு மணிவண்ணன்.
இலங்கையில் நடந்த திட்டமிட்ட இன அழிப்பு என பலரும் கூறுவது வழமை. ஆனால் இது இன்று நன்கு திட்டமிட்டு நடப்பதை தடுக்கத் தவறினால் அதன் தாக்கம் தமிழ் மக்களின் முழு அடையாளத்தையும் அழிப்பதை யாரும் தடுக்க முடியாது என சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் பொது நிர்வாகத் துறையின் பேராசிரியரும் தலைவருமான ராமு மணிவண்ணன் லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்டமேசை நிகழ்வில் தெரிவித்தார்.

இலங்கையில் தமிழினப் படுகொலை பற்றிய ஆவணப் புத்தகம்
இந்தப் புத்தகத்தின் ஆசிரியர், பேராசிரியர் இராமு மணிவண்ணன் சென்னைப் பல்கலைக் கழகத்தின் அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறையின் தலைவர். இப் புத்தகம் சென்னைப் பல்கலைக் கழகத்தின் வெளியீடு ஆகும். கடந்த ஆறு ஆண்டுகளாக இருபது துணைக் குழுமத்தினைக் கொண்டு இப் புத்தகம் தயாரிக்கப் பட்டது.
சென்னையில் மார்ச் 21, 2014 அன்று புத்தக விமர்சனம் திரு பழ. நெடுமாறன் ஐயா தலைமையில் கவிஞ்ஞர் காசியானந்தன் மற்றும் மனிதவுரிமை ஆவலர்கள் அனைவரும் இந்த அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இப் புத்தகத்தின் சர்வதேச அறிமுக நிகழ்வு சுவிற்சலாந்தின் ஜெனீவா மாநகரில் Geneva Press Club இல் மார்ச் 25, 2014 அன்று Mr. Geffery Roberston Q.C, Mr. Ali Beydon Professor American University Washinton மற்றும் மாணிக்கவாசகர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகார அமைச்சர் அமைச்சின் அவர்களின் பங்களிப்புடன் நடந்தேறியது.
இப்புத்தகத்தின் மையக் கருத்து இலங்கையில் நடந்தது மற்றும் இப்பொழுது நடந்து கொண்டிருப்பது இனப்படுகொலை என்பதை சரித்திர சான்றுகளுடன் எடுத்துரைக்கின்றது. உலக நாடுகளும் சர்வதேச சாமூகம் 2009 இல் நடந்தேறிய போரில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களையும் மனித குலத்திற்கு எதிரான சம்பவங்களை மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றன.
ஆனால் இப் புத்தகம் இந்த போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான சம்பவங்கள் அனைத்துமே 1948 முதல் தமிழ் இனத்திற்கு எதிரான இனப்படுகொலையின் தொடர் நிகழ்வே. சமூக அரசியல், இராணுவ, சரித்திர சான்றுகளுடன் இப் புத்தகம் 1026 பக்கங்களைக் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது. இப் புத்தகத்தின் சிறப்பு அம்சமாக Mr . Callum Macrae ( Director of The Killing Fields, No Fire Zone) அவர்களின் முன்னுரையுடன் வெளிவந்துள்ளது.