Breaking News

யூன் 3 இல் மோடியைச் சந்திக்கிறார் ஜெயலலிதா!!


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் எதிர்வரும் யூன் 3ஆம் நாள் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களைச் சந்திப்பார் என தமிழக அரசு செய்தி வெளியிட்டள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு:

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜூன் 3-ம் தேதி புது டெல்லி பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்துப் பேசுவார்.

பிரதமர் அலுவலகத்தில் நடக்கும் இந்தச் சந்திப்பின்போது, தமிழக அரசின் சார்பில் மனு ஒன்றை பிரதமரிடம் அவர் அளிப்பார். அதில், மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள தமிழகத்தின் மிக முக்கிய விவகாரங்கள் அடங்கியிருக்கும்.
தமிழகத்தின் வளர்ச்சிப் பாதையை துரிதமாக்குவதற்கு வித்திடக் கூடியதும், மாநில நலனைக் காக்கக் கூடியதுமான மத்திய அரசு அதிவேகமாக கவனம் செலுத்தக்கூடிய விவகாரங்கள் முன்வைக்கப்படும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது, நதிநீர்ப் பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரதமருடன் முதல்வர் ஜெயலலிதா பேசுவார் எனத் தெரிகிறது.