Breaking News

இத்தாலி – பலெர்மோவில் மே18 முள்ளிவாய்க்கால் வணக்க நிகழ்வு

இத்தாலி பலெர்மோ  மானகரில் பியாட்சா பொலித்தியாமாவில்
பி.பகல் 5 மணியளவில் மே18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பில் இறுதிவரை களமாடி விதையான மாவீரர்களையும் மானச்சாவெய்திய பொதுமக்களையும் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு தமிழீழ தேசியக் கொடியேற்றலோடு ஆரம்பமாகியது. பொதுச்சுடர் ஏற்றல் ஈகைச்சுடர் ஏற்றல் நினைவுச்சுடர்கள் ஏற்றல் அகவணக்கம் மலர் வணக்கம் மெழுகுச்சுடர்பவனி கவிதைகள் சிறப்புரைகள்.மாலதி நடனப் பள்ளி மாணவிகளின் முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம் நடனம். 





இத்தாலியப்பிரதிநிதிகளின் உரை என்பன இடம்பெற்றது.இந்நிகழ்வில் பல வருடங்களாக ஈழத்தமிழ் மக்களின் தன்னாட்சி  உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பலெர்மோ மானகர முதல்வர் டுநழடரஉய ழுசடயனெழ  கலந்து சிறப்புரையாற்றினார் இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டார்கள் இந்நிகழ்வில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர்கள் இத்தாலி ஈழத்தமிழர் மக்களவைப் பிரதிநிதிகள் தமிழ் இளையோர் அமைப்பினர் தமிழர்புனர்வாழ்வு கழக சமூகநல அமைப்புசெயற்பாட்டாளர்கள் ஈழத்தமிழர் விளையாட்டுசம்மேளன நிர்வாகத்தினர் திலீபன் தமிழ்ச்சோலை ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் மாலதி நடனப்பள்ளி மாணவிகள் விளையாட்டு கழகங்கள் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் என பலரும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டது இந்நிகழ்விற்கு மேலும் வலுச்சேர்த்தது இறுதியில் தாரக மந்திரம் உச்சரிக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் பாடல் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றுது.






குறிப்பு 17.05.2014 மாலை 7.30 மணியளவில் பலெர்மோ சன் டொமேனிக்கோ தேவாலயத்தில் முள்ளிவாய்க்காலில் மடிந்த மக்களிக்கும் மாவீரர்களிர்குமான  நினைவு திருப்பலி பலெர்மோ வாள் தமிழ் கத்தோலிக்க மக்களால் முன்னெடுக்கப்பட்டது இத்திருப்பலியிலும் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டார்கள்.