Breaking News

சூட்கேஸை திருடிய மர்ம நபர்.. மாற்று உடை இல்லாமல் தவித்த பூஜா ஹெக்டே!

 





தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின்னர், பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடித்தார். இதுதவிர தெலுங்கில் பிரபாஸ், இந்தியில் சல்மான் கான் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்த நிலையில், பிரான்ஸில் நடைப்பெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை பூஜா ஹெக்டேவும் கலந்துகொண்டுள்ளார். அங்கு கவர்ச்சி உடையில் கலந்துகொண்ட அவர் திரைப்பிரபலங்களின் கவனத்தை ஈர்த்தார். கேன்ஸ் விழாவில் முதன்முறையாக அவர் கலந்துகொள்கிறார். 

இந்நிலையில் அவ்விழாவில் சில சிக்கல்களையும் சந்தித்துள்ளார் பூஜா. விழாவில் கலந்து கொண்ட பூஜா ஹெக்டேவின் சூட்கேஸ் திருடு போய்விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பூஜா ஹெக்டே தனது சூட்கேசில் விலை உயர்ந்த ஆடைகள் மற்றும் விலை உயர்ந்த மேக்கப் பொருட்களை வைத்து இருந்ததால் அந்த சூட்கேஸ் மர்ம நபர்களால் திருடப்பட்டது எனவும், இதனால் பூஜா ஹெக்டே மற்றும் உதவியாளர்கள் பதட்டத்தில் இருந்ததாக தெரிகிறது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்த நேரம் பார்த்து இப்படி சூட்கேஸ் தொலைந்ததால் பூஜா மட்டுமல்லாது அவரது உதவியாளர்களும் உணவு கூட எடுத்துக்கொள்ளாமல் அடுத்த கட்ட ஏற்பாடு பற்றி தீவிரமாக யோசனையில் ஈடுபட்டுள்ளனர். 

பின்னர் ஒருவழியாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு நிகழ்ச்சியை சிறப்பாக முடித்தாராம் பூஜா ஹெக்டே. கேன்ஸ் நிகழ்ச்சியில் அவர் அணிவதற்குத் தேவையான விலை உயர்ந்த ஆடைகள், நகைகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு அவர் புறப்பட்டுள்ளார். பூஜா தனது சூட்கேஸ்களை ஒன்றை இந்தியாவில் தனது காரில் விட்டுச் சென்று உள்ளார். மேலும் ஒன்று பாரிஸில் தொலைந்து போய் உள்ளது. நல்லவேளையாக அவர் எடுத்துவந்த விலை உயர்ந்த நகைகள் அவரிடம் பத்திரமாக இருந்ததாம். இச்சம்பவத்தால் அவர் சற்று மனமுடைந்துள்ளார்.