அரசியலமைப்பின் 21வது திருத்தம் நாளை அமைச்சரவையில்!
அரசியலமைப்பின் 21வது திருத்தம் நாளை (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இது தொடர்பான சட்டமூலத்தை நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய அரசியலமைப்பில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் எனவும் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் அமர்வதைத் தடுக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சுயாதீன ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை அதிகரிப்பதற்கும் மேலும் பல சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுவதற்கும் இந்தத் திருத்தம் நோக்கமாக உள்ளது.
அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடி இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், அது நாளை அமைச்சரவையில் முன்வைக்கப்படும் எனவும் நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.