Breaking News

நாட்டில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பூட்டு!

 நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஊழியர்களை மிரட்டி வாடிக்கையாளர்கள் எரிபொருள் பெற்றுக்கொள்ள மேற்கொண்ட நடவடிக்கை காரணமாகவே எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாம்புடுன்ன தெரிவித்தார்.


அந்த நிரப்பு நிலையங்களுக்கு கோரப்பட்டுள்ள அனைத்து எரிபொருளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்திலேயே இவ்வாறான அதிகளவான வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது இதுவரை 5 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகத்தை முறையாக மேற்கொள்ள ஆதரவு வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் மூடப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாம்புடுன்ன தெரிவித்துள்ளார்.