Breaking News

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்களில் அதிகரிப்பு!

 


அரச மற்றும் தனியார் பேருந்து கட்டணங்கள் 19.5 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் 27 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச பேருந்து கட்டணம் இன்று முதல் 32 ரூபாவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

350 பிரிவுகளின் கீழ் இவ்வாறு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதிவேக நெடுஞ்சாலை பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று நள்ளிரவு முதல் இவ்வாறு கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.