21வது திருத்தத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குவதாக மைத்திரிபாலஸ்ரீசேன அறிவிப்பு!
தானும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை முழுமையாக ஆதரிப்பதாக அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வரைவில் உள்ள அனைத்து திருத்தங்களுக்கும் உடன்படுவதாகவும் மேலும் பல முன்மொழிவுகளும் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.