O/L மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!
தற்போது க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை தொடர்பில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வெள்ளம் அல்லது ஏனைய அனர்த்தங்களினால் பரீட்சார்த்திகள் திட்டமிடப்பட்ட பரீட்சை நிலையத்திற்குச் செல்ல முடியாமல் போனால் அருகில் உள்ள பரீட்சை நிலையத்திற்குச் சென்று க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.