யாழ். புங்குடுதீவு பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி!
கம்பஹா – மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு பெண்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக இன்று (05) சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த வைரஸ் தொற்றாளர் தற்போது கொழும்பு IDH மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பெண்கள் உட்பட 22 பேர் புங்குடுதீவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பிசிஆர் பரிசோதனை மூலம் இந்த முடிவு கிடைத்துள்ளது.