ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள விஷேட செய்தி!
நாளை (06) நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக வௌியாகியுள்ள செய்தியில் உண்மை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள விஷேட அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
நாளை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வௌியாகியுள்ள செய்தியில் உண்மை இல்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
போலியான செய்திகளை நம்பி அச்சமடைய வேண்டாம் என தெரிவிக்கப்படுகின்றது.