ஊரடங்கு காலப்பகுதியில் 7000 மாணவிகள் கர்ப்பம்..!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஐந்து மாதங்களில் மாத்திரம் 07 ஆயிரம் பாடசாலை மாணவிகள் கர்ப்பமாகியுள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா அச்சம் காணப்படுகின்ற நிலையில் பல நாடுகளில் கொரோனாவை கட்டுப்படுத்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலவியில் பாடசாலைகள் மூடப்பட்டதுடன்இ ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
இந்த காலப்பகுதிக்குள் (05 மாதங்கள்)சுமார் 7000க்கும் அதிகமான பாடசாலை மாணவிகள் கர்ப்பமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதில் பல மாணவிகள் 10 வயது முதல் 14 வயதுக்குற்ப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
குறித்த தகவலை அரசு அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் கொரோனா காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களையும் மூட அரசாங்கம் உத்தரவிட்டது.
இதன்பின்னரே மாணவிகள்இ சிறுமிகள் கருத்தரிப்பது அதிகரித்துள்ளதாக குறித்த அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பலோம்பே நகரில் மட்டும் இந்த காலக்கட்டத்தில் 1000 சிறுமிகள் கருத்தரித்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது..