Breaking News

பையில் இருந்து பூனைக்குட்டி ..... ரணிலில் கையில் இருந்து ? (காணொளி)

Let the cat out of the bag என ஆங்கில மரபுத்தொடர் உண்டு. தமிழில் அதனை பையில் இருந்து பூனைக்குட்டி வெளியே வந்தது எனலாம்.

அவ்வாறு பையில் இருந்து பூனைக் குட்டி வருவதைப்போல ரணிலில் கையில் இருந்து சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பை மையப்படுத் திய பூனைக் குட்டி மீண்டும் ஒரு முறை நுழைந்துள்ளது.

கடந்த 2016 ஜனவரியில் சிறிலங்காவின் நாடாளுமன்ற அரங்கை அரசியல மைப்பு சபையாக அவதாரம் எடுக்கவைக்கும் நகர்வு முதன் முறையாக நடை பெற்றுள்ளது.

அதன் பின்னர் சீர்திருத்தத்துக்குரிய வழிநடத்தல் குழு அமைப்பின் உருவாக் கம் நாடாளாவிய ரீதியிலான கருத்தறியும் அமர்வுகள் நகர்வுகள் என சில முக்கிய காட்சிப்படுத்தல்கள் நல்லாட்சி (ஜகப்பாலனய) என வர்ணிக்கபட்ட மைத்திரி- ரணில் தேசிய அரசாங்க காலத்தில் நடைபெற்றன.

இப்போது கூட்டு ஜகப்பாலன இல்லை. மாறாக கடந்த ஒக்டோபர் 26 இல் புகை வெடித்த அந்த 52 நாட்களின் பின்னர் தனித்தனி ரணில் மைத்திரி ஆவர்த் தனங்களே உள்ளன.

இந்த நிலையில் முதன் முதலில் 2016 இல் அரசியலமைப்பு சபையாக அவ தாரம் எடுத்த நாடாளுமன்றம் இன்று (11.01.2019) ஏறத்தாழ 3 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் ஒருமுறை அதே அவதாரத்தை எடுத்தது இதற்கு முன்னரும் இவ்வாறன அவதாரங்கள் எடுக்கப்பட்டனதான் அவற்றையும் மறுப்பதற் கில்லை.

ஆனால் நல்லாட்சி (?) கவிழ்ந்த பின்னர் இப்போதுதான் முதன்முதலில் நாடா ளுமன்றம் அரசியலமைப்பு சபையாக அவதாரமெடுத்திருக்கிறது. இன்றைய அவதாரமெடுப்பின்;

ஒரு முக்கிய நகர்வாக புதிய அரசமைப்புக்காக அது சார்ந்த நிபுணர்கள் மற்றும் சட்டவல்லுநர்கள் உருவாக்கிய உத்தேச வரைவுத் திட்டத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த நகர்வு அமைந்திருந்தது.

புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டை ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட் டோம்! பௌத்த மதத்துக்கான முன்னுரிமையை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்ற முக்கிய உறுதி மொழிகளை சிங்கள மஹாஜனதாவுக்காக முன்னெச் சரிக்கையாக எறிந்த பின்னரே ரணில் இதனை நகர்த்தியிருந்தார்.

ரணிலின் இந்த நகர்வைத் தொடர்ந்து நாடாளுமன்ற அரங்கக் கச்சேரி காரசார மாக நடந்தது. எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே இதற்காக கண்ணிவெடி வைத்து காத்திருந்த மகிந்த இதனை ஊடறுத்துள்ளாா்.

பொதுத் தேர்தலை வையுங்கள்; அப்போது புதிய அரசியலமைப்புக்கான யோச னையைச் சொல்கிறோமென எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் அவர் குயுக்தி செய்தார் புதிய அரசியலமைப்பு வேண்டுமா?

அப்படியானால் தேர்தலுக்கு வாருங்கள். தேர்தல் ஊடாக புதிய அரசியல் அமைப்பு தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும எனவும்; புதிய அரசியலமைப்பை உருவாக்கும் சூழல் இதுவல்ல என்பவை மகிந்த சிந்தனா (பக்க) வாதமாக இருந்தது.

இந்த நிலையில் மகிந்த வாதத்தை கடுமையாக ஊடறுத்து வெளிப்பட்டது இரா. சம்பந்தனின் வாதம். சிங்களமக்கள் மத்தியில்மகிந்தஅணி பேரினவா தத்தைத் தூண்டுவதாக குற்றஞ்சாட்டிய சம்பந்தன், மகிந்தாவாதிகள் போலித் தேசப்பற்றாளர்களாக நடிப்பதாகவும் சாடியுள்ளனா்.

புதிய அரசியலமைப்புக்கும் தேர்தலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை யென்ற சம்பந்தன் மூவின மக்களும் ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு அவசியமென்றார்.

அத்துடன் தலைநகரில் அதிகாரத்தைக்குவிக்காமல் மாகாண மற்றும் பிரதேச ரீதியில் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க வேண்டுமென சுட்டிக்காட்டினார் இதன் பின்னர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மனோகணேசன் போன்றவர்களும் உரையாற்றினர்.

இதில் அநுரகுமார திஸாநாயக்காவும்; மகிந்த தரப்பை ஒரு வறுத்தெடுத்தார் புதிய அரசியலமைப்பு தொடர்பாக மஹிந்தவும் அவரது சகாக்களுமே, விகாரை விகாரையாகச் சென்று ஏப்ரல் மாதத்துக்குள் நாடுபிளவுபடும், சமஷ்டி அரசமைப்பு உருவாகும் என்பதான போலிப்பரப்புரைகளை முன்னெ டுத்து வருவதாக வறுத்தெடுத்துள்ளாா்.

அத்துடன் புதியஅரசியலமைப்புக்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்கா விட்டால் அதன்பிறகு ஓர் அடியேனும் முன் வைக்க முடியாதென்ற யதார்த்தமுள்ள நிலையில் நீங்கள் ஏன் குத்தி முறிகின் றீர்கள் எனச் சீறியுள்ளாா்.

 இதேபோல அரசியலமைப்பு உரையுடன் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு ஒரு பாசவலையை எறிந்த அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைய வேண்டும்.

அமைச்சுப்பதவிகளைப் பெற்று தமிழ் பகுதிகளுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும் என்றார்.

 

இவ்வாறாக அரசியலமைப்பு சபையாக அவதாரம் எடுத்த நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் வரை புதிய அரசியலமைப்பு அதிர்வுகள் எழுந்து அடங்கின.

புதிய அரசியலமைப்புக்குறித்து மகிந்தஅணி ஊதிப்பெருப்பிக்க முயன்றாலும் இரா.சம்பந்தனும் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் சொன்ன யதார்த்தமே இங்கு முக்கியமானது.

அதாவது புதிய அரசியலமைப்பு நகர்வுகள் எவ்வளவுதான் கவர்ச்சிகரமாக இருந்தாலும் இறுதியில் நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான் மையும் சர்வஜன வாக்கெடுப்பு எனப்படும் குடியொப்பவாக்கெடுப்பு ஆகியவற் றின் இறுதி முடிவுதான் இதன் வாழ்வையும் சாவையும் தீர்மானிக்கும்.

ஒருவேளை நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிட்டினா லும் குடியொப்ப வாக்கெடுப்பிலும் அது வெற்றிபெற வேண்டுமென்பது சிறி லங்கா புதிய அரசியலமைப்பு மாற்றத்துக்குத் தேவையான நியதியாகி விட்டது.

இவ்வாறான நியதிகள் சிறிலங்கா அரசியலமைப்பை மையப்படுத்தியிருந்தா லும் இவ்வாறு Twist and turn அரசியல் ஆட்டங்கள் நடைபெறும் அந்தத்தீவில் உள்ள அரசாங்கத்துக்கு இப்போது ஜனநாயகம மட்டுமல்ல பணநாயகமும் பிரச்சனை.

இலங்கையில் கடந்த ஒக்டோபர் 26 இல் முகைவெடித்த அந்த 52 நாட்களின் களத்தில் மறைமுகமாக இடம்பெற்ற ஒரு விடயம் இந்தோ சீன ஆட்டம். இந்த ஆட்டத்தில் இறுதியில் பெரியண்ணன் சக மேற்குலகின் வியுகங்களுடன் ஜனநாயகத்தின் பெயரால் ரணில் அரசாங்கம் கொலுவிருத்தப்பட்ட நகர்வும் பகிரங்கமானது.

ஆகையால் இந்தப்பிரச்சனைக்கு பதில் சொல்லவேண்டிய ஒரு பொறுப்பு சீனாவுக்கு எதிரான ஆடுகளத்தில் நின்ற பெரியண்ணன் சக மேற்குலகம் சார்ந் தது.

இதனால் இலங்கைத்தீவில் கடும் பொருளாதாரக் குலுக்கங்கள் ஏற்படாமல் அந்தத்தீவின் அரசியல் நாடகங்கள் தொடவேண்டுமென்பதால் உதவிக்கரங் கள் நீளுகின்றன. அந்தவகையில் பெரியண்ணன் வீட்டின் மத்திய வங்கியாகிய றிசேவ் வங்கி சின்னத்தம்பிவீட்டின் மத்திய வங்கிக்கு, 4 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்க இணங்கியுள்ளது.

மேற்குலகத் தரப்பிலிருந்து அனைத்துல நாணயநிதிய கடனை பெற்றுக் கொள்ள மங்கள சமரவீர இப்போது அமெரிக்காவுக்கு பறந்த நிலையில் பெரியண்ணனின் உதவிக்கரம் நீளுகின்றது.

ஆக மொத்தம் ரணில் அரசாங்கத்துக்கு இப்போது புதிய அரசியலமைப்பு தலை யிடியை விட இந்த வருடம் 2200 பில்லியன் ரூபாயை கடனாகச் செலுத்த வேண்டிய தலையிடி முக்கியமானது.

தலையிடியும் காச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பதைப்போல 1300 பில்லியன் ரூபாய் கடன்தொகை 900 பில்லியன் ரூபாய்வட்டித்தொகை என்ப வற்றை செலுத்தவேண்டிய தலையிடியும் பிரதமரான ரணிலுக்குத் தானே தெரியும்.