Breaking News

இராஜாங்க அமைச்சருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!!!

நாட்டினுள் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட சிறுவர் மற்றும் மகளிர் விவகார இரா ஜங்க அமைச்சர் விஜயகலா மீது பிரதமரின் அறிவுறுத்தலுக்கமைய ஒழுக் காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென பாராளுமன்றில் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் வடகிழக்கு மாகா ணங்களில் தமிழீழ விடுதலை புலிகளின் கைகள் ஓங்கினால் தான் தமிழ் மக்கள் நிம்ம தியாகவும் சுதந்திரமாகவும் வழ முடியும் என்று தெரிவித்திருந்தார். 

இந் நிலையில் இன்று பாராளுமன்றம் கூடிய போது விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தினால் பாராளுமன்றில் பெரும்வாதப் பிரதி வாதங்கள் ஏற்பட்டதோடு அவரை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சபாநாயகரிடம் விடுக்கப்பட்டது. 

இதன் காரணமாக தொடர்ந்து பாராளுமன்ற அமர்வுகளை நடத்திச் செல்வ தற்கு தடை ஏற்பட்டதால் பாராளுமன்ற அமர்வை நாளை காலை வரையில் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளாா்.