Breaking News

“விஜயகலா மகேஸ்வரனை கைது செய்க ஜனாதிபதிக்கு கடிதம்“

புலிகள் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்தினால் தற்போது இராஜாங்க அமை ச்சுப் பதவியிலிருந்து பதவி விலகியுள்ள விஜயகலா மகேஸ்வரனை கைது செய்யுமாறு சிங்கள ராவய அமைப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனா திபதிக்கு கடிதமொன்றை கையளித்துள்ளதாக சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மகல்கந்தே சுகந்த தேரர் தெரிவித்துள்ளாா். 

இது குறித்து வினவிய போது அவர் மேலும் தெரிவித்ததாவது, விடுதலை புலிகள் தொடர்பில் அண்மையில் சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டு இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து பதவி விலகியுள்ள விஜயகலா மகேஸ்வரனை உடன டியாக கைதுசெய்ய வேண்டுமென இன்று காலை 10 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் கடிதமொன்றை கையளித்தோம்.

இக்கடிதத்தில் ஜனாதிபதியின் தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி, இவ்வாறு பயங்கரவாதத்தை தோற்றுவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு அரசியலமைப்புக்கு எதிராக செயற்பட்டமைக்காக பாராளுமன்ற உறுப்பின ரான விஜயகலா மகேஸ்வரனை கைது செய்ய பொலிஸ்மா அதிபருக்கு ஜனா திபதி உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளோம். 

எனவே தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்த இவரை காலம் தாழ்த்தாது உடனடியாக கைதுசெய்ய வேண்டிய நடவடிக்கைகளை நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி செயற்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.