ஜனாதிபதி, பிரதமரின் செயற்பாடுகள் ஏமாற்றத்தை தருகின்றது - மாவை.!
ஜனாதிபதியும் பிரதமரும் இரண்டு பக்கங்களில் இருந்து ஆற்றுகின்ற கடமை எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த ஏமாற்றம் மூன்று ஆண்டுகளாக நீடித்துள்ளது.
ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றாக வேலை செய்து வடக்கு கிழக்கு தேச த்தை கட்டியெழுப்பவேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித் துள்ளாா்.
"உத்தியோகபூர்வப் பணி" ஜனாதிபதி மக்கள் சேவையின் 8 ஆவது வேலை த்திட்டம் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள் ளாா்.
மேலும் உரையாற்றுகையில்
இந்த சேவையை நாம் வரவேற்கின் றோம். வடபகுதி கிழக்கு என்பன 30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலப்பகுதியாக போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசமா கும்.
மக்கள் எதிர்பார்த்தது போன்று 2015 ஆம் ஆண்டு ஜனவரியிலும் அதற்குப் பின் ஆகஸ்ட் மாதத்திலும் நடைபெற்ற தேர்தல்களில் எங்களுயுடைய மக்கள் குறிப்பாக தமிழ்பேசுகின்ற மக்கள் மிக உயர்ந்தளவில் தங் கள் தீர்ப்பை வழங்கி உங்களை தெரிவு செய்தார்கள்.
பாராளுமன்றத் தேர்தலிலே பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தலைமையில் ஏனைய கட்சிகளும் இணைந்த அமைச்சரவை அமைந்தது. வடக்கு கிழக்கு மாகாணத்தில், அதே பாணியில் தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எங்களது மக்கள் வாக்களித்துள்ளார்கள்.
நான் குறிப்பிட வேண்டிய விடயம் என்னவென்றால் ஜனாதிபதியும் இந்த அரசு ஆட்சியினரும் எமது மக்களுக்கு முன்னாள், அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தவறிவருகின்றது.
3 ஆண்டுகளாக இதனைதொடர்ந்து வருகின்றனர். குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இப்போது ஜனாதிபதியினுடைய பணிப்பில் பிரதமருடைய ஆலோசனையில் உள்நாட்டு அமைச்சர் என்ற வகையில் அனைத்து விடயங்களுக்கும் பொறுப்பேற்று இங்கு வந்துள்ளனர்.
எங்களுடைய மக்களுடைய ஆதங்கம் என்னவென்றால் ஜனாதிபதியும் பிரதமரும் இரண்டு பக்கத்தில் இருந்து ஆற்றுகின்ற கடமை எங்களுக்கு ஏமாற்றத்தைதருகின்றது.
தமிழ் மக்களும் குறிப்பாக ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றாக வேலை செய்வதற்கு ஒரு தேர்தல் அறிக்கைக்கு ஏற்பவே வாக்களித்து நீங்கள் வெற்றிபெற்றிருக்கின்றீர்கள்.
தென்னிலங்கையில் நீங்கள் பிளவு பட்டிருந்தால் ஒரு வேளை ஜனாதிபதியாக வேறொரு சிங்களத்தலைவர் வருவார். பிரதமராகவும் வேறொரு சிங்களத் தலைவர் வருவார். ஆனால் நாங்கள் உங்கள் அமைச்சுக்களின் பங்காளிகள் அல்ல. நாங்கள் உங்கள் திட்டங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல. அமைச் சுப் பதவிகளுக்காக போராடவில்லை.
முப்பது வருட காலப்போரிலே எங்களுடைய தேசம் அழிக்கப்பட்டு மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
எங்களுடைய தேசத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் மீளகட்டியெழுப்புவதற்காகத்தான் நாங்கள் உங்களுடன் வேலைசெய்கின்றோம்.
இதில் நாங்கள் பல ஏமாற்றங்களை அடைந்திருக்கின்றோம். நீங்கள் இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் மக்களுடைய தேவைகளை நிறைவேற்ற வந்திருந்தா லும் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்.மாவட்டத்தின் மீள்குடியேற்றத்திற்கு என 2016 ஆம் ஆண்டு 14 ஆயிரம் மில்லியன் அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டு 9ஆயிரம் மில்லியன் 2018 ஆம் ஆண்டு 5 ஆயிரம் மில்லியன் கூட ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. அதில் மூன்றில் ஒரு பங்கைத்தானும் ஒதுக்கி இருக்கிறீர்களா என மென்மையாகக் கேட்க வேண்டியவர்களாகவுள்ளோம்.
உரத்து குரல் கொடுக்கவேண்டிய நேரம் வரும் வரை பார்த்துக்கொண்டிருக்கின்றோம். ஆனபடியினால் சாதாரண மக்களுக்கு ஆயிரம் தேவைகள் இருக்கின்றபோதும் நூறுதேவைகளாவது நிறைவேற்றப்படவேண்டும்.
அரசாங்கம் மனம் திறந்து தாங்கள் செய்த விடயங்கள் ஒதுக்கிய நிதி தொடர் பில் பேசவேண்டும். நாங்கள் உங்களை வரவேற்கின்றோம். உங்கள் திட்டங்களுக்கு வரவேற்பு அளித்தோம். ஆனால் ஏமாந்து விட்டோம்.
இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்தபோது பிரதமர் 12 விடயங்களைக் குறிப்பிட்டு கடிதம் ஒன்றை அனுப்பினார். ஆனால் நாங்கள் அதற்கு ஒப்பந்தம் செய்யவில்லை. ஜனாதிபதியுடனும் ஒப்பந்தம் செய்யவில்லை.
மக்களுடைய தேவைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்பதற்காகத்தான் பாராளுமன்றத்தில் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றோம்.
இந்த நிகழ் ச்சி எங்களுக்கு ஆறுதலைத்தந்தாலும் மகிழ்ச்சியடையவில்லை. மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படவேண்டிய பல விடயங்கள் நிறைவேற்றப்படவில்லை.
ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றுகின்றபோதும் தேர்தலின்போதும் ஆறுமாதத்திற்குள் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்படுவதாகக்கூறினார். ஆனால் அதனை விடுவிக்கவில்லை.
எங்களுடைய தேசத்தை மீளக்கட்டியெழுப்புகின்ற விடயத்தில் நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம்.
கடந்த வரவு செலவுத் திட்டத்தின்போது கூட்டமைப்பின் சார்பில் ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சருடன் கலந்துரையாடியபோது 16விடயங்கள் சொல்லப்பட்டுள்ளன.
எங்களுடைய மக்களுக்கு நிலம் இல்லை வீடுகள் இல்லை.
முன்னாள் போராளிகள் அவர்களுக்கான வேலைவாய்ப்பு பெண் தலைமைத்துவ குடும்பங்கள் போன்றவற்றுக்கு திட்டங்களை உருவாக்கி அந்த நிதியை விடுவிக்கவேண்டும்.
தென்னிலங்கையில் இருந்து வடக்கு கிழக்கிற்கு ஊழியர்களை நிரப்ப வேண்டாம்.
இப்பகுதிகளுக்கு எமது பகுதி இளைஞர்களுக்கே வேலை வாய்ப்பு வழங்கவேண்டும். வடக்கு, கிழக்கு என பல திட்டங்கள் ஒதுக்கப்படுகின்ற போது அவை இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. நாங்கள் கொள்கைக்காக நீண்ட காலமாக மக்களால் தெரிவு செய்யப்பட்டு வருகின்றபோது
அண்மையில் ஜனாதிபதி ஒரு செயலணியை அமைத்திருக்கின்றார்.
இதில் வடக்கு கிழக்கை சேர்ந்த பாராளுமன்ற பிரதிநிதிகள் சம்பந்தப்படாமல் அமைச் சர்களை மட்டும் கொண்டு செயலணி அமைத்திருக்கின்றார்கள்.
ஒரு முஸ்லிம் பிரதிநிதியை நியமிப்பதில் நாங்கள் கவலைப்படவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானை நியமித்துள்ளீர்கள். முதலமைச்சரை நியமித்துள்ளீர்கள். ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களை நியமிக்கவில்லை. இதற்கு நாங்கள் எங்கள் கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.
ஜனாதிபதி ஒரு கூட்டத்தை நடத்துகின்றார். பிரதமர் மற்றுமொரு கூட்டத்தை நடத்து கின்றார். இந்த நடவடிக்கையில் மாற்றம் வரவேண்டும்.
மக்கள் பல் வேறு துன்பங்களைச் சந்தித்துக்கொண்டு வருகின்றார்கள்.
குறிப்பாக பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் துஷ்பிரயோகம், வாள்வெட்டுக் கள் போன்றவை அதிகரித்துக் காணப் படுகின்றன. இதுமட்டுமன்றி நுண்கடன் திட்டங்களினால் பெண்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் அதிகரித்து வரு கின்றன.
எனவே இந்த நுண்கடன் திட்டங்கள் மீளப்பெறப்படவேண்டும். இதற்கான கோரிக்கையை ஜனாதிப பிரமரிடம் முன் வைத்துள்ளோம். உங்களிடமும் இதனைக் கூறுகின்றேன். அடுத்த அமைச்சரவைக்குள் அனைவரும் ஒன்றி ணைந்து திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக் கின்றேன்.