Breaking News

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இன்று ஒத்திவைப்புவேளை பிரேரணை.!

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இன்று ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது. 

இதற்கான அறிவித்தலை கூட்டமை ப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாரா ளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் விடுத்துள்ளார். மேலும் தெரி விக்கப்பட்டுள்ளதாவது, 

கடந்த 2017 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாத த்­துடன் 3 மாகாண சபை­களின் பத­விக்­காலம் நிறை­வ­டைந்­துள்ள நிலையில் தேர்தல் முறையில் சீர்­தி­ருத்­தங்­களைக் கொண்டு வரு­வ­தற்­காக மாகாண சபை தேர்தல் சட்ட விதி­களில் மாற்­றங்கள் கொண்­டு­ வ­ரப்­பட்­டுள்­ளது.­

மேற்­கூ­றிய 3 மாகாண சபை­க­ளி­னதும் தேர்­தல்கள் இன்று வரை நடை­பெ­றா­துள்ள அதே­வேளை, 2018 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதத்­துடன் மேலும் 3 மாகாண சபை­களின் பத­விக்­காலம் முடி­வ­டை­ய­வுள்­ள­துடன் தேர்தல் சட்ட சீர் தி­ருத்­தங்கள் இன்னும் முடி­வ­டை­யா­துள்­ள­தால் எந்­த­வொரு மாகாண சபை க்கும் தேர்­தலை நடத்த முடி­யாத சூழ்­நிலை காணப்­ப­டு­கின்­றது. 

தேர்தல் சட்ட விதி­களின் திருத்­த­மா­னது உட­ன­டி­யாக செய்து முடிக்­கப்­பட வேண்­டிய தேவை இதனால் எழு­கின்­றது. இதன் மூலம் பல்­வேறு மாகா­ணங்­களைச் சேர்ந்த மக்­களின் உரி­மைகள் மேலும் மறுக்­கப்­ப­டாமல் செய்ய முடி யும். 

மாகாண சபை தேர்தல் சட்ட விதி­களில் சீர்­தி­ருத்­தத்தை உட­ன­டி­யாக மேலும் தாம­த­மின்றி செய்து முடிக்­கு­மாறு நாம் அரசை வலி­யு­றுத்­து­கின்றோம். எதிர்­வரும் 2 மாதங்­க­ளுக்குள் இச் சீர்­தி­ருத்­தங்­களை செய்யத் தவறும் பட்சத்தில் 2017 ஆம் ஆண்டு மாகாண சபை (திருத்தம்) சட்டம் இல.17 உடனடியாக நீக்கப்ப டுவதன் மூலம் தேர்தலை உடனடியாக நடத்தி முடிக்க அரசை நாங்கள் வலியுறுத்துகிறோமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.