Breaking News

பத­விக்­கா­லத்தை நீடிக்­கு­மாறு எவ­ரையும் கோர­வில்லை - முதலமைச்சா்.!

எனது பத­விக்­கா­லத்­தை நீடிக்­கு­மாறு நான் எவ­ரையும் கோர­வில்லையென  வடமாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரிவித்துள்ளார்.

முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனின் பத­விக்­காலம் நீடிக்­கப்­ப­டாது என்று அமைச்­ச­ரவை முடிவு அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் எழுப்­பப்­பட்ட கேள்வி ஒன்­றுக்கு பதி­ல­ளித்த அமைச்­ச­ரவை பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன கருத்து தெரிவித்துள்ளாா்.

இவ் விடயமாக விளக்­க­ம­ளித்­துள்ள முத­ல­மைச்சர் மேலும் தெரிவிக்கையில்.

 நான் எனது பத­விக்­காலத்தை நீடிப்­பது சம்­பந்­த­மாக எவ­ரையும் கோர­வில்லை. பத்­தி­ரி­கைகள் திடீ­ரென்று கேட்கும் கேள்­வி­க­ளுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்று எனது ஆலோ­ச­கர்கள் கூறி­யதைப் புறக்­க­ணித்­ததால் வந்த வினை இது.

எமது பத­விக்­காலம் முடிந்து தேர்தல் தாம­தித்து நடக்­கப்­ப­ட­வி­ருப்­பதைப் பற்­றியே கேள்வி என்­னிடம் கேட்­கப்­பட்­டது. தாம­தித்து தேர்­தல்கள் நடை­பெற்றால் ஆளுநர் ஆட்சி வரும். இது தவிர்க்­கப்­ப­ட­வேண்டும்.

அவ்­வாறு ஆளுநர் ஆண்டால் 13 ஆவது திருத்­தச்­சட்டம் கொண்டு வந்­த­தற்கு அர்த்­தமே இல்­லாது போய்­விடும். மத்­திய அர­சாங்கம் தமக்கு வேண்­டி­ய­வற்றை இங்கு நடத்த அது வழியமைத்­து­விடும் என்ற அர்த்­தத்தில் கூற வந்த போது தான் தேர்தல் வரையில் எமது பத­விக்­காலம் நீடிக்­கப்­ப­டு­வ­தாக இருந் தால் இப் பிரச்­சினை எழாது என்று கூறினேன்.

நான் என் பத­வியை நீடிக்கக் கோர­வில்லை. அத­னு­டைய அர்த்தம் தேர்­தல்கள் உரிய காலத்தில் நடத்­தப்­ப­ட­வேண்டும் என்­பதே. அதைச் சாட்­டாக வைத்து எமது வட­கி­ழக்கு மாகா­ணங்­களில் எமக்கு உகந்­தவை அல்ல என்று நாம் அடை­யாளம் காணும் விட­யங்­களை ஆளு­நர்கள் இங்கு வேரூன்ற விட இட­ம­ளிக்கக் கூடாது என்ற அர்த்­தத்­தி­லேயே தெரிவித்துள்ளேன் எனத் தெரிவித் துள்ளாா்.