Breaking News

பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
பிரித்தானியாவிலும் அனுஸ்டிக்கப் பட்டுள்ளது. பிரித்தானியாவின் வேல்ஸ்(Wales)பகுதியில் உள்ள Singleton park ல் அம் மானிலத்தில் ஈழத்தில் மண்மீட்புக்காக களமாடி வீர காவியமாகிய போராளிகளையும் மற்றும் யுத்தத்தின் போது சிங்கள அரசாங்கத்தினால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவித்தமிழ் மக்களையும் நினைவு கூரும் வகையில் மரங்களும் நாட்டப்பட்டது.

இந் நிகழ்வினை தமிழர் தேசிய செயற்பாட்டாளர் திரு.வேதநாயகம் சஞ்ஜீவ தனுஷன் அவர்களால் ஏற்பாடுசெய்யப்பட்ட இந் நிகழ்வில் பொதுச்சுடரினை முன்னாள் போராளி திரு.மகேஸ் ஏற்றி வைத்தும்,வேல்ஸ் நகரக் கொடியினை அம் மாநிலத்தில் உள்ள Bridgend பிரதேசத்தின் கவுன்சிலர்(counciler) ஆன திரு.சசிறூபனும்,தமிழீழ தேசியக்கொடியினை ஈழத்தில் இறுதிவரைக்கும் நின்று மருத்துவப்பணியாற்றிய வைத்தியர் வாமணனும் ஏற்றிவைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர். பின்னர் மாவீரர்களையும்,படுகொலை செய்யப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்களையும் நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்தி மலர் மற்றும் தீப அஞ்சலியும் நிகழ்வில் கலந்து கொண்ட மக்களால் செய்யப்பட்டது.

இந்த மரங்கள் நடப்பட்ட இடத்தில் (19.05.2018)  நேற்று அப்பகுதியில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்களால் இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்ட அப்பிவிப் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.