பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சிகரமான நற்செய்தி !!
நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளிலும் தரம் 6 தொடக்கம் உயர்தரம் வரையிலான வகுப்புக்களுக்கு மடி கணினிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரிய வசம் தெரிவித்துள்ளார்.
மடிக் கணினிகளை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் இரண்டு மாதங்களில் மேற்கொள்ளப்படுமெனவும் மேலும் தெரி வித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் தொடர்ந்தும் தெளிவுப்படுத்துகையில்,
சர்வதேச ரீதியி ல் தற்போது கல்வி நடவடிக்கைகள் தொழில்நுட்ப மயப்படுத்தப்பட்டுள்ளன. சர்வதேச ரீதியில் அபிவிருத்தியடை ந்த நாடுகள் பலவற்றில் ஆரம்பக் கல்வி தொடக்கம் கல்வி நடவடிக்கைகள் தொழில்நுட்ப ரீதியிலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது இலங்கையிலும் கல்வி நடவடிக்கைகளை தொழில் நுட்ப ரீதியில் முன்னெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் தற்போது இலங்கையின் கல்வி துறை முன்னைய காலங்களை விடவும் பாரிய முன்னேற்றங்களை அடைந்து வரும் நிலையில், மேலும் அதனை விருத்தி செய்யும் வகையிலான செயல் திட்டங்களை அரசா ங்கம், கல்வி அமைச்சு மற்றும் மாகாண கல்வி அமைச்சு என்பன இணைந்து முன்னெடுத்து வருகின்றன.
இச் சந்தர்ப்பத்தில் வெளிநாடுகளிலிருந்தும் இதற்கான உதவிகள் கிடைக்கப்பெறுகின்றன.
அதனடிப்படையில் இலங்கையின் தமிழ் மொழிமூலமான பாடசாலைகளுக்கு இலவச நூல்களை பெற்றுக் கொள்ளல் மற்றும் ஆசிரியர் பரி மாற்றம் பற்றிய செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இந்தியாவில் கடந்த வாரம் நடைபெற்றுள்ளது.