Breaking News

நாடாளுமன்ற மோதல் திட்டமிடப்பட்டு அம்பலமாகியது !

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த 10ஆம் திகதி ஏற்பட்ட மோதலானது திட்டமிடப்பட்டு நடைபெற்றதாக தக வல்கள் கசிந்துள்ளன. 

நாடாளுமன்றத்தின் பணிகளை குழ  ப்புவதற்காகவே  மோதல் ஒன்று ஏற்ப டுத்தப்பட்டதாக சபாநாயகரின் அலு வலகம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடி தொட ர்பாக விவாதிப்பதற்காக கடந்த 10ஆம் திகதி நாடாளுமன்றத்தின் விசேட அம ர்வு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியிருந்தது. இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலை மையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. 

இதன் காரணமாக நாடாளுமன்றத்தின் பணிகள் முற்றாக பாதிக்கப்பட்டிருந்த துடன், மோதல் இடம்பெற்றபோது எடுக்கப்பட்ட காணொளிகளை வைத்து விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டது. 

இதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணையின்போது, அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மோதலானது திட்டமிடப்பட்டு முன்னெடுக்க ப்பட்டதாக சபாநாயகரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.