Breaking News

தபால் மூல முதலாம் கட்ட வாக்களிப்பு திங்கள் ஆரம்பம்.!

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இரண்டு கட்டங்களாக இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழ மை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொலி ஸார் தபால் மூல வாக்களிப்பில் கல ந்து கொள்ள உள்ளனர். 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களில் நடைபெறவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகளுக்கான அதிகப்படி யான தபால் மூல வாக்காளர்கள் எண்ணிக்கை குருணாகல் மாவட்டத்தில் பதி வாகியுள்ளதாக தேர்தல்கள் திணைக்கள பிரதித் தலைவர் எச். எம். மொஹ மட் தெரிவித்தார். இதன்படி குருணாகல் மாவட்டத்தில் தபால் மூல வாக்காள ர்கள் தொகை 67 ஆயிரமாக பதிவாகியுள்ளது. 

இதற்கு அடுத்தபடியாக கண்டி மாவட்டத்தில் 48 ஆயிரம் பேரும், அநுராதபுர மாவட்டத்தில் 45 ஆயிரம் பேரும் பதிவாகியுள்ளனர். இதேவேளை, இம்முறை தேர்தலில் 5 இலட்சத்து 60 ஆயிரத்து 20 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள தாக தேர்தல்கள் திணைக்கள பிரதித் தலைவர் எச். எம். மொஹமட் தெரிவி த்தார்.