இலங்கை வீராங்கனை அமெரிக்காவில் சாதனை !
மரதன் போட்டிகளில் புதிய தேசிய சாதனை ஒன்றை நிலை நாட்டியுள்ளார் இலங்கையின் மரதன் வீராங்கனையான ஹிருணி விஜேரத்ன.
டெக்ஸாஸின் ஹொட்சனில் நடைபெற்ற சர்வதேச மரதன் போட்டியின் போதே ஹிருணி இந்த புதிய சாதனை யை படைத்தார்.
இதற்கு முன்இல ங்கை வீராங்கனை நிலூகா ராஜசேகரவினால் நிலைநாட்டப்பட்டிருந்த இர ண்டு மணித்தியாலயம் 40 நிமிடம் 7 வினாடிகளில் அடைந்த பந்தயத் தூர த்தை, தற்போது ஹிருணி விஜேரத்ன இரண்டு மணித்தியாலயம் 36 நிமிட ங்கள் 35 வினாடிகளில் கடந்து இலங்கையின் தேசிய சாதனையை புதுப்பித்து ள்ளார்.
இந்த தேசிய சாதனையுடன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் கோல்ட் கோஸ்டில் நடைபெறவுள்ள கொம ன்வெல்த் போட்டிகளில் பங்குபற்ற வும் தகுதிபெற்றார்.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற 2017 Eugene மரதன் ஓட்டப் போட்டியில் பெண்கள் பிரிவில் ஹிருணி வெற்றிபெற்றிருந்தார்.
ஹிருணி விஜேரத்ன 2017 Eugene மரதன் போட்டியினை நிறைவு செய்வதற்கு 2:43:31 மணி நேரத்தை எடுத்துக்கொண்டார். இந்தப் போட்டியில் ஹிருணி வெளிப்படுத்திய நேரத்திற்கமைய அவர் கடந்த ஆண்டு லண்டனில் நடைபெற்ற உலக சம்பியன்ஷிப் தடகள போட்டியில் பங்குபற்றவும் தகுதி பெற்றார்.
ஹிருணி அமெரிக்காவில் வாழ்வதோடு அங்கிருந்து போட்டிக்கான பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகி ன்றார். அதேபோல் மரதன் போட்டிகளில் சர்வதேச அளவில் மிகப்பெரிய பந்தயமாக கருதப்படும் லண்டன் மரதன் போட்டியிலும் ஹிருணி கலந்து கொண் டிருந்தமை குறிப்பிடத்தக்கது.