Breaking News

ஜனா­தி­பதி, பிர­த­ம­ருக்கு வலி­யு­றுத்­து­வ­தாக சம்­பந்தன் அறிவிப்பு.!

நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து மூன்று ஆண்­டுகள் கடந்தும் தமிழ் மக்­களின் நீண்­ட­கால பிரச்­சி­னை­க­ளுக்­கான நிரந்­தர தீர்வு கிடைக்­க­வில்லை, அடுத்த தைப்­பொங்­க­லு க்குள் எமக்­கான நிரந்­தர அர­சியல் தீர்­வு­கி­டைக்க வேண்டுமென ஜனா­தி­பதி, பிர­த­ம­ருக்கு வலி­யு­றுத்­து­வ­தாக எதி ர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். தேசிய தைப்­பொங்கல் பண்­டிகை நிகழ்வு நேற்று அல­ரி­மா­ளி­கையில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து ­கொண்டு கருத்துத் தெரி­விக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மேலும் கூறு­கையில், தமி­ழர்­களை பொறுத்த வரையில் தைப்­பொங்கல் மிக வும் முக்­கிய நிகழ்­வாகும். தமிழர் அனை­வரும் புனி­த­மாக கொண்­டாட வேண்­டிய ஒரு நிகழ்வு. 

எமது மக்கள் பயிர்ச்­செய்­கையில் ஈடு­பட்டு அறு­வ­டைக்­கான காலத்தில் இய ற்கை எமக்கு கொடுத்த ஒத்­து­ழைப்­புக்­காக இயற்­கைக்கும் சூரி­ய­னுக்கு நன்றி தெரி­விக்கும் நிகழ்­வாக கொண்­டாடி வரு­கின்­றனர். 

எமது மக்கள் ஆழ்ந்த கலா­சார பாரம்­ப­ரி­யத்­திற்கு உரித்­தா­னர்­வர்கள். தமது கலா­சா­ரத்தை பாரம்­ப­ரி­யத்தை முன்­னேற்றி இந்த நாட்டில் நீண்­ட­காலம் வாழ்ந்து வரு­கின்­றனர். 

ஆனால் எமது மக்கள் எமது நாட்டில் இன்றும் சம­மான ஒரு அந்­தஸ்தை பெற்று வாழக் கூடிய சூழல் உரு­வா­க­வில்ல. நான் இங்கு வர­முன்னர் லக் ஷ்மர் கதிர்­காமர் நிறு­வ­னத்தில் ஒரு நிகழ்வில் கலந்­து­கொண்­டி­ருந்தேன். இந்­தி­யாவின் முக்­கிய அமைச்­சர்­களின் ஒரு­வ­ரான ரவிசங்கர் பிரசாத் வந்­தி­ரு ந்தார். அவர் சில முக்­கிய கார­ணி­களை சுட்­டிக்­காட்­டினார். 

அர­சியல் சாசன ரீதி­யா­கவும் ஜன­நா­யக ரீதி­யா­கவும் இந்­தியா ஏற்­ப­டுத்­தி­யுள்ள வளர்ச்சி பற்றிக் கூறினார். இந்­தி­யாவும் இலங்­கையை போலவே சமாந்­தர காலங்­களில் சுதந்­திரம் பெற்­றது. 

ஆனால் கடந்த 70 ஆண்­டு­களில் அர­சியல் சாசன ரீதி­யாக ஜன­நா­யக ரீதி­யாக இந்­தியா பாரிய முன்­னேற்­றங்­களை கண்­டுள்­ளது. அந்த நாட்டில் வெவ்­வேறு மொழிகள், கலா­சாரம், சமய மக்கள் வாழ்ந்­து­ வந்­தாலும் அனை­வரும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு சம அந்­தஸ்­துடன் சம பிர­ஜை­க­ளாக வாழ்ந்து வரு­கின்­றனர்.

ஆனால் இலங்­கையில் அவ்­வா­றான ஒரு நிலைமை இன்னும் ஏற்­ப­ட­வில்லை. கல்வி, விஞ்­ஞான, பொரு­ளா­தார ரீதியில் நாம் முன்­னேற்றம் காணா­துள்ளோம். 

எமது முயற்­சி­களை மக்­களின் நன்­மைக்­காக பயன்­ப­டுத்­தாது மக்கள் மத்­தியில் வேற்­று­மையை ஏற்­ப­டுத்தும் வகையில் பயன்­ப­டுத்­து­வது பாரிய சிக்­க­லாக மாறி­யுள்­ளது. இந்த நிலைமை மாற வேண்டும். புதிய அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து மூன்று ஆண்­டுகள் கடந்­துள்­ளன. 

இந்த மூன்று ஆண்­டு­களில் சில கரு­மங்கள் நடந்­துள்­ளன. அதை நாங்கள் மறு க்­க­வில்லை. ஆனால் இவை ஒரு முடி­வுக்கு வர­வேண்டும். அர­சியல் சாசன ரீதி­யாக முடி­வுக்கு வர­வேண்டும். 

இந்த நாட்டில் மக்கள் சம பிர­ஜை­க­ளாக சம உரி­மை­க­ளுடன் வாழ­ வேண்­டி­யது மிகவும் அவசியமாகும். ஜனாதிபதியும் பிரதமரும் இந்த கருமங்களை முன்னெடுக்க விரும்புகின்றனர். அதனை நிறைவேற்ற வேண்டும். 

அடுத்த ஆண்டு தைப்பொங்கல் விழாவின் போது நிலைமைகள் மாறியிருக்க வேண்டும். அதுவே தமிழ் மக்கள் அனைவரதும் எதிர்பார்ப்பாகுமெனத் தெரி வித்தார்.