Breaking News

பதவி ரத்து நிமல் லன்ஸா - கொழும்பு அரசியலில் கொந்தளிப்பு !

சுதேச விவகாரப் பிரதியமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நிமல் லன்ஸா பதவியை ரத்துச் செய்துள்ளார். 

இராஜினாமா கடிதத்தை அவர் ஜனா திபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்துள்ளார். இராஜினாமா செய்வ தற்கான காரணத்தை இதுவரை தெரி விக்கவில்லை.  

இவரை இந்தப் பதவிக்கு நியமிப்பத ற்கு முன்னதாக இப்பதவியை நாடா ளுமன்ற உறுப்பினரான அருந்திக்க பெர்ணான்டோ வகித்துள்ளதோடு அவரும் அப்பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

மேலும் பதவியிலிருந்து விலகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்ஸாவின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக எதையுமே அறிய முடிய வில்லை. 

இந்த நிலையில் வெற்றிடம் ஏற்பட்டுள்ள இடத்திற்கு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன யாரை நியமிக்கப்போகின்றார் என்ற தகவலும் இதுவரை  தெரி விக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.