“தங்கள் தேவைக்காக எங்களை நாடுகின்றனர்“ – காணாமலாக்கப்பட்டோரின் உறவு கண்ணீர்!
ஒவ்வொருவரையும் நம்பி வாக்களித்து ஏமாந்துவிட்டோம் இனியும் நாம் வாக்களிக்க கூடிய நிலையில் இல்லையென முல்லைத்தீவில் 280 ஆவது நாளாக போராடும் காணாமல்போனோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட காணாமல்போன உறவின் தாயொரு வர் கண்ணீருடன்.....
எங்களுடைய போராட்டத்தை இது வரை யாருமே கண்டுகொள்ள வில்லை. எங்களுடைய பிள்ளைகள் கிடைக்குமென இந்தா முடிவு சொல்வார்கள் அடுத்த மாதம் முடிவு சொல்வார்கள், அடுத்தமாதம் பதில் கிடைக்குமென ஒவ்வொரு தடவையும் நாங்கள் ஏங்கித் தவித்துக்கொண்டிருக்கிறோம். எங்களுக்கு யாருமே முடிவு சொல்லவில்லை. எத்தனையோ சந்திப்புக்க ளுக்கு சென்று எண்ணற்ற கடிதங்களை கொடுத்தும் எல்லோரையும் கேட்டு ள்ளோம். இதுவரை யாரும் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.
நாங்கள் யுத்தத்தால் இடம்பெயர்ந்து தங்கியிருந்த முகாமில் இருந்து மீள்குடி யேற்றம் வந்தவுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வந்தார்.
நாங்கள் எங்களுடைய பிள்ளைகள் எங்களுக்கு கிடைக்குமென்ற நம்பிக்கையோடும் எங்களுக்கு ஒரு விடுதலை கிடைக்குமென ஒரு ஆவலுடன் வாக்களித்தோம்.
எங்களுக்கு எந்த முடிவும் கிடைக்கவில்லை அதனைத்தொடர்ந்து மைத்திரி ஜனாதிபதியாக வந்தார். அவரையும் நாங்கள் கூடிய பாகம் எதிர்பாா்த்தோம் அவரும் அதையே செய்தார்.
- திருப்பவும் இப்போது எங்களிடம் வந்து வாக்கு கேட்கின்றனர். ஆனால் நாங்கள் வாக்களிக்க கூடிய நிலையில் இல்லை.
- எங்களுடைய பிள்ளைகளை தொலைத்துவிட்டு தேடி ஒரு முடிவு மில்லை.
- எங்களுக்கு ஒரு ஆறுதலும் இல்லை.
இப்போது தங்களுக்கு ஒரு தேவை வரும் போது எங்களை நாடி வருகின்றனர்.
உங்களுக்கு எங்களுடைய இரண்டு கதவும் திறந்திருக்கும். எப்போதும் எங்களை வந்து சந்தியுங்கள் நாங்கள் வேண்டியது செய்வோமென தெரிவிக்கி ன்றனர்.
ஆனால் நாங்கள் அதை இனியும் நம்பத் தயாரில்லை.
எங்கட பிள்ளைகள் தொடர்பில் எங்களுக்கு ஒரு சிறந்த முடிவைத் தாருங்கள்.
எங்கட பிள்ளைகள் தொடர்பான ஒரு பதில் தாருங்கள் இனியும் எங்களால் தாமதிக்க முடியாது. ஏனென்றால் இப்போது ஒன்பது வருடங்கள் ஆகி விட்டது.
எங்களுக்கு யோசித்து அழுது கவலைப்பட்டு பிள்ளைகளைப் பற்றியே சிந்தி த்துச் சொல்ல முடியாத அளவுக்கு வருத்தங்கள் வந்து விட்டது.
அதனால் எங்களால் நடக்கவோ சிறிது நேரம் நிற்கவோ முடியாமல் உள்ளது.
ஏனென்றால் நாங்கள் வேதனைப்படுகிறோம். எங்களுக்கு மிக விரைவில் சிறந்த தீர்வை தாருங்கள் என மன்றாட்டமாக கோருகிறேன் என கண்ணீர் மல்க மன்றாடியுள்ளார்.