மைத்திரி – ரணில் கூட்டாட்சி 2020 வரை நீடிக்குமா ?
தற்போது பதவியிலுள்ள கூட்டு அரசு 2020ஆம் ஆண்டு வரைக்கும் பதவியில் நீடிக்கும் அதற்கான பச்சைக் கொடியை சிறிலங்கா சுதந்திரக் கட்சி காட்டியுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படி க்கையின் ஆயுட்காலம் எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடைகின்ற நிலையில், 2020ஆம் ஆண்டு வரை நீடி ப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி பச்சைக்கொடி காட்டியுள்ளதாக தக வல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தலில் மைத்திரிபால சிறிசேன அரச தலைவர் தேர்தலில் வெற்றிபெற்று 2018ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதியுடன் மூன்றாண்டுகளா கின்றன.
இதனை முன்னிட்டு நடைபெறவுள்ள நிகழ்வின்போதே ஒப்பந்த நீடிப்புக்குக் கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டு, உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவடைந்த பின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படு மென தெரிவிக்கப்படுகின்றது.
கூட்டு அரசில் மட்டுமின்றி உள்ளூராட்சி சபைகளிலும் கூட்டு அரசமைப்பதற்கான யோசனை புதிய ஒப்பந்தத்தில் உள்வாங்கப்படவுள்ளது.
கூட்டரசிலிருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறவேண்டுமென சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் சிலர் அரச தலைவரிடம் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்தனர்.
டிசெம்பர் 31ஆம் திகதிவரை பொறுமைகாக்குமாறு அவர்களுக்கு அரச தலைவர் ஆலோசனை வழங்கியிருந்தார்.
அரசியல் உறுதிப்பாட்டுத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காகவே அவர் இவ்வாறு செய்திருந்தார்.
தற்போது கூட்டு எதிரணி பலமிழந்து வருகின்றது. அதேவேளை, மைத்திரியின் கை ஓங்கிவருகின்றது.
எனவேதான், பொருளாதார வளர்ச்சி, எதிர்கால நோக்கு உட்பட முக்கிய சில விடயங்களை கருத்திற்கொண்டு கூட்டரசை 2020 ஆம் ஆண்டு வரை தொடர்வதற்கு அரச தலைவர் தரப்பிலிருந்து பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.