கோட்டாபய தேர்தல் மேடையில் ஏறுவார் என - பெசில் ராஜபக்ச
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் கள மேடையில் ஏறுவார் என அவரது சகோதரரும், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பெசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா நல்லாட்சி அரசாங்கத்தின் நாட்டைப் பிளவுபடுத்துகின்ற முய ற்சிகளுக்கு முட்டுக்கட்டைப் போடு கின்ற செயற்பாடுகளில் தற்போ தும்கூட கோட்டாபய ராஜபக்ச ஈடு பட்டு வருவதாகவும் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச தெரி வித்துள்ளார். ஸ்ரீலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு நீண்ட நாட்களுக்குப் பின்னர் கொழு ம்பில் நேற்று மாலை இடம்பெற்றது.
இதில் கட்சியை நிறுவுவதற்கு முழுமை யான முயற்சிகளை மேற்கொண்டவரும், முன்னாள் பொருளாதார அபிவி ருத்தி அமைச்சருமான பெசில் ராஜபக்ச கலந்துரையாற்றுகையில் கருத்து வழங்கியுள்ளார்.
குறிப்பாக எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சிறப்பு வெற்றியைப் பதிவுசெய்யுமென நம்பிக்கை வெளியிட்டார்.
“கோட்டாபய ராஜபக்ச அக் காலத்திலிருந்து இது வரையிலும் தேர்தல் நடவடி க்கைகளுக்கு தொடர்புபடவில்லை.
எனினும் தேசிய வேலைத்திட்டங்களிலும், தேசியப் பிரச்சினைகளிலும் தலை யீடு செய்வார் என நம்புகிறேன். விசேடமாக நாட்டைப் பிளவுபடுத்தும் முயற்சிகளைத் தடுப்பதற்காக அவர் தனதுயிரையும் பணயம் வைத்து போரா டியவர் என்ற வகையில் நாட்டைப் பிளவுபடுத்தும் விடயங்களுக்கு எதிராக இன்றும் செயற்படுகிறார்.
அதற்காகவே ஒளி என்ற அமைப்பை உருவாக்கி அதனூடாக செயற்பாடுகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத் தேர்தலைக்கூட நாங்கள், நாட்டைப் பிள வடையச் செய்யும் முயற்சிகளுக்கு எதிரான சர்வஜன வாக்கெடுப்பாகவே பயன்படுத்த முயற்சிக்கின்றோம்.
எனவே இத் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச தனது முழுமையான பங்க ளிப்பை செய்வார் என நம்புகின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.